சென்னை மக்களே... வெதர்மேன் விடுத்த புது எச்சரிக்கை....! இருளில் மூழ்கிய சென்னை..!

By thenmozhi gFirst Published Nov 21, 2018, 6:36 PM IST
Highlights

சென்னை மக்களே... வெதர்மேன் விடுத்த புது எச்சரிக்கை....! இருளில் மூழ்கிய சென்னை..!

தற்போது உருவாகி உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் கன மழைக்கான வாய்ப்பு உள்ளது என வெதர்மேன் தெரிவித்து உள்ளார்.
குறிப்பாக காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் உள்ளிட்ட  பகுதிகளில் இன்று இரவு முதல் நாளை காலை வரை கனமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என தெரிவித்து உள்ளார்.

அதில் குறிப்பாக சென்னையை பொறுத்தவரையில் பலத்த காற்றுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் தென்சென்னை மற்றும் காஞ்சிபுரம் உள்ளிட்ட இடங்களில் நாளை காலை வரை மிகவும் கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், வட தமிழகம் மற்றும் பாண்டி இடையே நல்ல மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும், கடலூர் மாவட்டத்தில் லேசான மழைக்கே வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சென்னை மற்றும் பண்டி இடையே , 50 கிலோ மீட்டார் வேகத்தில் காற்று வீசும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. தென் சென்னை, தாம்பரம், காஞ்சிபுரம், ஓரகடம் ,ECR, OMR ,மகாபலிபுரம், கல்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் அதிக மழைகான வாய்ப்பு உள்ளது என தெரிவித்து உள்ளார்.

சென்னையை பொறுத்தவரையில், இன்று காலை முதலே சாரல் இருந்தது.வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டதால், சென்னை முழுக்க  இருள் சூழ்ந்த வண்ணம்  உள்ளது.

click me!