
சென்னையில் மதியம் 3 மணிக்கு மேல் தொடர்ந்து 4 மணி நேரமாகப் பெய்துவரும் கன மழையால் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் நகரின் பெரும்பாலான பகுதிகளில் வெள்ள நீர் தேங்கியது.
சென்னை எத்திராஜ் மகளிர் கல்லூரி விடுதிக்குள் வெள்ளம் புகுந்தது. இந்த வெள்ள நீரில் மாணவிகள் பலர் சிக்கித் தவித்தனர்.
சென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் ஆகிய 3 மாவட்டங்களுமே கடும் மழையில் தத்தளிக்கிறது. ஆனால் சென்னை பல்கலைக்கழகம் தேர்வை நடத்தியே தீருவோம் என்று பிடிவாதம் பிடிக்கிறது. இதனால் மாணவர்களும் பெற்றோர்களும் பெரும் கவலை அடைந்துள்ளனர். இந்த விவகாரத்தில் அரசு தலையிட வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதனிடையே வெள்ள நீரில் சிக்கியது எப்போதுமே தத்தளிக்கும் மடிப்பாக்கம். அங்கே பார்க் ஸ்கொயர் பகுதிகளில் வீட்டுகளில் வெள்ளம் புகுந்தது. மேலும், வளசரவாக்கம், சிட்லபாக்கம், கீழ்பாக்கம், குரோம்பேட்டை, மாம்பாக்கம், வண்டலூரில் கனமழை பெய்து வருகிறது.
பல பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
கீழ்பாக்கம், மவுண்ட்-பூவிருந்தவல்லி சாலை, ஓஎம்ஆர், அடையாறு எம்.ஜி. சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
கத்திபாரா, ஆழ்வார்பேட்டை டிடிகே சாலை, சென்னை சென்ட்ரல் உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
கிழக்கு கடற்கரை சாலை, நீலாங்கரை உள்ளிட்ட பகுதிகள்,
தி.நகர், மாம்பலம், கிண்டி, வேளச்சேரி, நங்கநல்லூர், அரும்பாக்கம், நந்தனம் ஆகிய பகுதிகள்,
அரும்பாக்கம், அடையாறு, மடிப்பாக்கம், விருகம்பாக்கம், மயிலாப்பூர், மீனம்பாக்கம், தரமணி உள்ளிட்ட பகுதிகள்,
பள்ளிக்கரணை, ராமாபுரம், கோடம்பாக்கம், சூளைமேடு, அசோக்நகர், கீழ்கட்டளை, மேடவாக்கம் ஆகிய பகுதிகள்,
கே.கே.நகர், திருவான்மியூர், மணப்பாக்கம், ஆவடி, ராயப்பேட்டை, மதுரவாயல் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து, நீர்ப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
பலத்த மழை காரணமாக சென்னையில் சாந்தோம் நெடுஞ்சாலை முடங்கியது. சாந்தோம் நெடுஞ்சாலையில் வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து செல்கின்றன. சென்னையில் பெரும்பாலான இடங்களில் பேருந்துகள் இயங்காததால் பஸ்-ஸ்டாப்பில் பயணிகள் தவித்து வருகின்றனர்.