"உஷார்...!! நாளை தொடங்குகிறது வடகிழக்கு பருவமழை..." – வானிலை ஆய்வு மையம் தகவல்

Asianet News Tamil  
Published : Oct 30, 2016, 01:04 AM ISTUpdated : Sep 19, 2018, 12:52 AM IST
"உஷார்...!! நாளை தொடங்குகிறது வடகிழக்கு பருவமழை..." – வானிலை ஆய்வு மையம் தகவல்

சுருக்கம்

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நாளை முதல் தொடங்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் கூறியதாவது,  

மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவி வந்த 'கியான்ட்' புயல் முழுவதுமாக வலு இழந்துள்ளது. தற்போது அது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக அதே இடத்தில் நீடிக்கிறது.

இந்தநிலையில் இந்திய பகுதிகளில் இருந்து தென்மேற்கு பருவமழை விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை வருகிற அக்டோபர் 30-ந்தேதி உருவாகுவதற்கான சாதகமான சூழல் நிலவுகிறது.

அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையில் வடகிழக்கு பருவமழை இயல்பாக 44 செ.மீட்டர் வரை பெய்யும். இந்த ஆண்டும் வடகிழக்கு பருவமழை இயல்புநிலையை ஓட்டியே இருக்கும். அதாவது 39 முதல் 44 செ.மீட்டர் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தை பொறுத்தவரையில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை நகரை பொறுத்தவரையில் ஒரு சில இடங்களில் மிதமான மழையை எதிர்பார்க்கலாம் என தெரிவித்துள்ளார்.

PREV
click me!

Recommended Stories

சொன்ன மாதிரியே வெளுத்து வாங்கிய கனமழை.! அடுத்த 3 மணி நேரத்திற்கு எந்தெந்த மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!
Tamil News Live today 02 January 2026: ஒரே டேங்கில் 770 கி.மீ.. ரூ.70,000 ரூபாய்க்குள் கிடைக்கும் தரமான மைலேஜ் பைக்