இன்னும் 2 நாள்ல செம மழை காத்திருக்கு! 

 
Published : Oct 28, 2017, 11:06 AM ISTUpdated : Sep 19, 2018, 01:21 AM IST
இன்னும் 2 நாள்ல செம மழை காத்திருக்கு! 

சுருக்கம்

Rain increases in 2 days - Chennai Weather Research Center

வடகிழக்கு பருவமழை துவங்கிய நிலையில், சென்னையில் பரவலாக மழை பெய்து வருகிறது. மேலும் இரண்டு நாட்களுக்கு வடகிழக்கு பருவமழையின் தாக்கம் அதிகரிக்கும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது.

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை, வழக்கத்தைவிட அதிகமாக பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. கடந்த ஜூன் மாதம் துவங்கிய தென்மேற்கு பருவமழை அக்டோபர் மாதத்துடன் நிறைவு பெற்றது. 

தென்மேற்கு பருவமழை காரணமாக, கர்நாடக - தமிழக எல்லையில் உள்ள அணைகளில் நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. தென்மேற்கு பருவமழை காரணமாக, தமிழகத்துக்கு சற்று ஆறுதல் அளித்தது என்றே கூறலாம். 

தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இந்த முறை வடகிழக்கு பருவமழை அதிகமாக இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் கூறியுள்ளார்.

வடகிழக்கு பருவமழை வரும் இரண்டு நாட்களுக்கு மேலும் அதிகரிக்கும் என்று வானிலை மையம் கூறியுள்ளது. இதனால், தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

PREV
click me!

Recommended Stories

ஆட்டம் ஆரம்பம்..! நேற்று ராஜாஜி... இன்று சுப்பிரமணிய பாரதி.. தமிழர்களுக்கு மோடி மரியாதை
திமுகவை வீழ்த்த நினைப்பவர்கள் காணாமல் போய்விடுவார்கள்..! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கொக்கரிப்பு