
தமிழக சுகாதாரத் துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன்,எம்ஜிஆர் பல்கலைக்கழக துணை வேந்தர் கீதா லட்சுமி, முன்னாள் எம்.பி.சிட்லப்பாக்கம் ராஜேந்திரன் மற்றும் சென்னையில் உள்ள எம்எல்ஏ ஹாஸ்டல் என பல இடங்களில் வருமான வரித்துறையினர் இன்று அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர்.
ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலில் வாக்காளர்களுக்கு கணக்குவழக்கில்லாமல் பணப்பட்டுவாடா நடப்பதாக புகார் எழுந்தது. இதையடுத்து இந்த பணப்பட்டுவாடா யார் மூலம் நடைபெற்றது எனறி அடிப்படையில் சென்னையில் இன்று வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
அமைச்சர் விஜய பாஸ்கர், நடிகர் சரத்குமார் ஆகியோர் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டு வந்த நிலையில் தற்போது சுகாதாரத் துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன், எம்ஜிஆர் பல்கலைக்கழக துணை வேந்தர் கீதா லட்சுமி, முன்னாள் எம்.பி.சிட்லப்பாக்கம் ராஜேந்திரன் மற்றும் சென்னையில் உள்ள எம்எல்ஏ ஹாஸ்டல் என பல இடங்களில் வருமான வரித்துறையினர் இன்று அதிரடியாக சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
ஆர்,கே,நகர் தொகுதியில் நடைபெற்ற பணப்பட்டுவாடா, வாக்காளர்களுக்கு பரிசுப் பொருட்கள் வழங்கியது என தொடர் புகார் காரணமாகவே இந்த ரெய்டு என உறுதியான சொல்லப்படுகிறது.