ஜல்லிக்கட்டு தமிழ்நாட்டின் உயிர்…நெகிழ்ந்து ஆதரவுக்கரம் நீட்டும் தெலுங்கு திரை உலகம்...

 
Published : Jan 20, 2017, 06:47 AM ISTUpdated : Sep 19, 2018, 03:00 AM IST
ஜல்லிக்கட்டு தமிழ்நாட்டின் உயிர்…நெகிழ்ந்து ஆதரவுக்கரம் நீட்டும் தெலுங்கு திரை உலகம்...

சுருக்கம்

ஜல்லிக்கட்டு தமிழ்நாட்டின் உயிர்…நெகிழ்ந்து ஆதரவுக்கரம் நீட்டும் தெலுங்கு திரை உலகம்...

தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடை பெற்று வரும் போராட்டங்களுக்கு தெலுங்கு திரையுலகத்தைச் சேர்ந்த மகேஷ் பாபு உள்ளிட்ட சில நட்சத்திரங்கள் தங்களுடைய ஆதரவை தெரிவித்துள்ளனர்.

ஜல்லிக்கட்டுக்கு கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு  உச்சநீதிமன்றம் தடை விதித்தது. பீட்டா அமைப்பு இதற்கு பின் புலமாக இருந்து இயங்கி வருகிறது.

ஆனால் இந்த ஆண்டு எப்படியாவது நமது பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டை நடத்தியே தீர வேண்டும் என மத்திய, மாநில அரசுக்கு எதிராகவும், நீதிமன்ற ஆணைக்கு எதிராகவும் பல கட்ட போராட்டங்களை உலகம் முழுவதும்  தமிழர்கள் நடத்தி வருகின்றனர். 

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் இளைஞர்களும், மானவர்களும் நடத்தி வரும் எழுச்சிப் போராட்டத்திற்கு,கமல், ரஜினி, சிம்பு, பாராதிராஜா, அமீர், கரு.பழனியப்பன், யுவன் வங்கர் ராஜா உள்ளிட்ட தமிழ் சினிமா நட்சத்திரங்களும் தங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் தெலுங்கு திரையுலகிலிருந்தும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவுக் குரல்கள் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியுள்ளன.

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான மகேஷ் பாபு தனது டிவிட்டர் பக்கத்தில் ஜல்லிக்கட்டு தமிழ்நாட்டின் உயிர்.தங்களுடைய கோரிக்கைக்காக தமிழர்கள் இவ்வளவு ஒற்றுமையாக நடந்து கொள்வதை பார்க்கும் போது பெருமையாக உள்ளது  என குறிப்பிட்டுள்ளார்.

தமிழர்களின் போராட்டத்திற்கு பலன் கிடைக்கும் என நம்புவதாகவும், தமிழகத்தின் ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஆதரிக்கிறேன். எனவும் மகேஷ் பாபு தெரிவித்துள்ளார்.

இது போன்று பல்வேறு தெலுங்கு திரை உலகைச் சேர்ந்து ஏராளமான நட்சத்திரங்களும் ஜல்லிக்கட்டுக்கான தங்கள் ஆதரவை சமூக வலைத்தளங்கள் வாயிலாக பதிவு செய்து வருகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

முதல்வரோடு முருகன் கைகோத்துள்ளார்..! ஸ்டாலினிடம் இருந்து முருகனை யாராலும் பிரிக்க முடியாது..! சேகர்பாபுவின் முரட்டு முட்டு..!
தனி அறையில் 45 வயது பெண்.. விடாமல் இரவு முழுவதும் 5 பேர்.! மறுநாள் மரணம்.. நடந்தது என்ன?