முறையாக தேர்தலை நடத்தக்கோரி திமுகவினர் முற்றுகை போராட்டம்; அலுவலகத்திற்கு பூட்டுபோட முயன்றதால் பரபரப்பு...

 
Published : May 04, 2018, 08:21 AM ISTUpdated : Sep 19, 2018, 02:19 AM IST
முறையாக தேர்தலை நடத்தக்கோரி திமுகவினர் முற்றுகை போராட்டம்; அலுவலகத்திற்கு பூட்டுபோட முயன்றதால் பரபரப்பு...

சுருக்கம்

protest by dmk to conduct election in proper way

பெரம்பலூர்

முறையாக கூட்டுறவு சங்கத் தேர்தலை நடத்தக்கோரி கூட்டுறவு சங்க மண்டல இணைப்பதிவாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தி.மு.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அலுவலகத்திற்கு பூட்டுபோட முன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. 

தமிழகம் முழுவதும் நான்கு கட்டங்களாக கூட்டுறவு சங்கத் தேர்தல் நடந்து முடிந்தது. இதேபோன்று பெரம்பலூர் மாவட்டத்திலும் நான்கு கட்டங்களாக கூட்டுறவு சங்க தேர்தல் நடந்து முடிந்தது. 

இந்த நிலையில், பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சில கூட்டுறவு சங்கங்களுக்குத் தேர்தல் நடைபெறவில்லை. அதன்படி, சில்லாங்குடி, புஜங்க ராயநல்லூர் ஆகிய இரண்டு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு தேர்தல் இன்னும் நடக்கவில்லை. 

இதனைத் தொடர்ந்து இந்த இரண்டு சங்கங்களுக்கும் முறையாக தேர்தலை நடத்தக்கோரி நேற்று காலை திமுகவினர் பலர் கூட்டுறவு சங்க மண்டல இணைப்பதிவாளர் அலுவலகம் முன்பு கூடினர். 

அவர்கள், தி.மு.க. மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் தலைமையில் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து இணைப்பதிவாளர் அலுவலகத்திற்கு பூட்டு போடும் முயற்சியில் ஈடுபட்டனர். 

அப்போது காவலாளர்கள் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து பூட்டு போடும் போராட்டத்தை கைவிட்டனர். பின்னர் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் மாலை 6 மணி வரை அவர்கள் கலைந்து செல்லாமல் போராட்டத்தை தொடர்ந்தனர்.

இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், "மேற்கண்ட இரண்டு சங்கங்களுக்கும் கடந்த ஏப்ரல் மாதம் 30-ஆம் தேதி தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அன்று காலை முதல் சங்க அலுவலகத்தில் காத்து இருந்தோம். ஆனால், தேர்தல் அதிகாரிகள் யாரும் வரவில்லை.

இந்த நிலையில் இதுவரை தேர்தல் நடக்கவில்லை. எனவே, முறையாக தேர்தல் நடத்த வேண்டும். இல்லையென்றால் தேர்தல் ரத்து செய்யப்பட்டது அல்லது ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என்ற ஏதாவது ஒரு தகவல் தெரிவிக்க வேண்டும். 

இதற்காக மண்டல இணைப்பதிவாளரை சந்தித்து முறையிட வந்தோம். ஆனால், அவர் அலுவலகத்தில் இல்லை. எனவே, இதனைக் கண்டித்தும், தேர்தலை முறையாக நடத்தக்கோரியும் முற்றுகை போராட்டம் நடத்தி உள்ளோம்" என்று கூறினர். 

இதில் தி.மு.க. மாவட்ட துணை செயலாளர் பாஸ்கர், நகர செயலாளர் பிரபாகர், ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.  

PREV
click me!

Recommended Stories

தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பிருக்கா? பனியின் தாக்கம் எப்படி இருக்கும்? வானிலை அப்டேட் இதோ!
வாட்ஸ்அப்பில் வந்த வில்லங்கம்.. டிஜிட்டல் கைது செய்வதாக மிரட்டி ரூ.52 லட்சம் அபேஸ்!