திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும்..! பிரதமர் நரேந்திர மோடி

Published : Jan 16, 2026, 11:41 AM IST
Narendra Modi

சுருக்கம்

திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், தமிழ் கலாசாரத்தின் சிறந்த அம்சங்களுக்கு திருவள்ளுவர் எடுத்துக்காட்டாக திகழ்வதாகக் குறிப்பிட்டுள்ள அவர் அனைவரும் திருக்குறளை படிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், “திருவள்ளுவர் தினமான இன்று, ஏராளமான மக்களுக்கு உத்வேகம் அளிக்கும் படைப்புகளையும் சிந்தனைகளையும் கொண்ட பன்முக ஆளுமை திருவள்ளுவருக்கு மரியாதை செலுத்துகிறேன். நல்லிணக்கமும் கருணையும் நிறைந்த ஒரு சமூகத்தின் மீது அவர் நம்பிக்கை வைத்தார். தமிழ்க் கலாச்சாரத்தின் சிறந்த அம்சங்களுக்கு அவர் எடுத்துக்காட்டாகத் திகழ்கிறார். திருவள்ளுவப் பெருந்தகையின் சிறப்பான அறிவாற்றலை வெளிப்படுத்தும் திருக்குறளை நீங்கள் அனைவரும் படிக்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

 

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

அதிக விலைக்கு மின்சாரம் வாங்க துடிப்பதா..? திமுகவின் கொள்ளைக்கு அனுமதிக்க கூடாது.. அன்புமணி கோரிக்கை
2.30 மணி நேரம் தாமதமாக தொடங்கப்பட்ட பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி..!