
கூடுவாஞ்சேரி அருகே பொத்தேரி ரயில் நிலையத்தில் பெண் ஒருவர் கழுத்தறுபட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் போலீசார் ஒருவரை கைது செய்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம், கூடுவாஞ்சேரி அருகே உள்ள பொத்தேரி ரயில் நிலையத்தில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு வேலூரைச் சேர்ந்த பெண் சபிதா (30) கழுத்து அறுபட்ட நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.
இது தொடர்பாக, போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் கொலை தொடர்பாக போலீசார் ஒருவரை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அவரிடம் நடத்திய விசாரணையில், சபிதா கொலை வழக்கில் வேலூரைச் சேர்ந்த சாதிக் உசேன் (23) என்பவரும் சம்பந்தப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
இதையடுத்து, சாதிக் உசேனை பிடிக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இது தொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.