பிரபல கேரள நடிகருக்கு கத்தி குத்து; காரணம் தண்ணீர் தான்…

Asianet News Tamil  
Published : Feb 15, 2017, 07:57 AM ISTUpdated : Sep 19, 2018, 01:06 AM IST
பிரபல கேரள நடிகருக்கு கத்தி குத்து; காரணம் தண்ணீர் தான்…

சுருக்கம்

அடிமாலி,

தண்ணீருக்காக கிணறு தோண்டிய போது, பக்கத்து நிலத்துகாரருடன் ஏற்பட்ட பிரச்சனையில், பிரபல கேரள நடிகர் பாபுராஜூக்கு கத்திக்குத்து விழுந்தது.

நடிகர் மம்முட்டியுடன் கம்மத் அன்ட் கம்மத், செக்கண்ட் ஷோ, நாட்டி பிரபசர் போன்ற பல்வேறு படங்களில் நடித்தவர் நடிகர் பாபு ராஜ். இவர், நடிகை வாணி விஸ்வநாத்தின் கணவர்.

இவருக்கு சொந்தமான ‘ரிசார்ட்’ ஒன்று கேரள மாநிலம் கல்லார் பகுதியில் உள்ளது.

இங்கு தண்ணீர்த் தேவைக்காக கிணறு தோண்ட தீர்மானித்து, ‘ரிசார்ட்’ அருகே ஒரு இடத்தை பாபுராஜ் வாங்கினார்.

இந்த நிலையில் நேற்று அந்த இடத்தில் கிணறு தோண்டுவதற்காக தொழிலாளர்கள் வந்தனர்.

இதையறிந்த பக்கத்து நிலத்தின் உரிமையாளரான சன்னி என்பவர், தனது நிலத்தின் நீர்வளம் பாதிக்கப்படும் என்று கிணறு தோண்ட எதிர்ப்பு தெரிவித்து பிரச்சனை செய்தார். 

எதிர்ப்பு, வாக்குவாதமாக முற்றியதில், ஆத்திரம் அடைந்த சன்னி, தனது கையில் வைத்திருந்த கத்தியால், பாபுராஜூவின் மார்பு மற்றும் கைகளில் சரமாரியாக குத்தினார். பின்னார், அங்கிருந்து தப்பியோடி விட்டார்.

கத்தி குத்தில் பலத்த காயம் அடைந்த பாபுராஜை, சிகிச்சைக்காக அருகில் இருந்த ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து அடிமாலி காவலாளர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

 

PREV
click me!

Recommended Stories

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. மழை குறித்து வானிலை மையம் சொன்ன முக்கிய அப்டேட்!
ஓய்வூதியத் திட்டம்.. அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை திட்டமிட்டு ஏமாற்றியது அம்பலம்.. சொல்வது யார் தெரியுமா?