புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் மழை..!  35 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும்...! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

Asianet News Tamil  
Published : Jun 23, 2018, 07:43 PM ISTUpdated : Sep 19, 2018, 02:33 AM IST
புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் மழை..!  35 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும்...! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

சுருக்கம்

pondicherry and chennai rain Weather Center Alert

வெப்பசலனத்தின் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழையோ, அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் புதுச்சேரி மற்றும் தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் 35 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

சென்னையைப் பொறுத்தவரை மாலை, அல்லது இரவு நேரங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம் சென்னையில் மட்டும் அதிக பட்ச வெப்பநிலை 38 டிகிரியாகவும், குறைந்த பட்ச வெப்பநிநலை 29 டிகிரியாகவும் இருக்கும் எனத் தெரிவித்துள்ளது.  

PREV
click me!

Recommended Stories

சிம்பு விக்கெட்டை எடுத்தது நான்தான்! வைரலாகும் முதல்வர் ஸ்டாலின் ஸ்பின் பவுலிங் வீடியோ!
பாஜகவையே பைபாஸ் செய்யும் எடப்பாடி... கையை பிசையும் அமித் ஷா அண்ட் கோ..!