நிர்மலா தேவியிடம் போலீசார் விடிய விடிய விசாரணை...!

 
Published : Apr 17, 2018, 10:57 AM ISTUpdated : Sep 19, 2018, 02:15 AM IST
நிர்மலா தேவியிடம் போலீசார் விடிய விடிய விசாரணை...!

சுருக்கம்

Police investigate Nirmala Devi

உயர் அதிகாரிகளிடம் அட்ஜெஸ்ட் செய்து கொள்ளும்படி மாணவிகளை நிர்பந்தித்த கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவியிடம் போலீசார் விடிய விடிய விசாரணை நடத்தியுள்ளனர்.

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோடடையில் செயல்பட்டு வரும் தேவாங்கர் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி, மாணவிகளிடம் உயர் அதிகாரிகளிடம் அட்ஜெஸ்ட் செய்து கொள்ளும்படி வற்புறுத்தினார். நிர்மலாதேவியின் வற்புறுத்தினாலும், அந்த மாணவிகள் அதனை மறுத்தனர். பேராசிரியை மாணவிகள் பேச்சு அடங்கிய ஆடியோ, கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் வெளியாகியது.

அந்த ஆடியோ பதிவில், கல்லூரி மாணவிகள் சிலரிடம், பேசும் நிர்மலாதேவி, மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் சில அதிகாரிகள் உள்ளனர் என்றும் அவர்களது விருப்பத்திற்கு நீங்கள் சம்மதம் தெரிவித்தால், அவர்கள் உங்களை அடுத்த கட்டத்திற்கு அழைத்து செல்வார்கள் என்றார். மேலும், மாதம் தோறும் உங்கள் வங்கி கணக்குகளில் பணம் செலுத்தப்படும், 85 சதவீத மதிப்பெண்களும் உஙகளுக்கு வழங்கப்படுடம் என்று கூறினார். இந்த விவகாரம் மிகவும் ரகசியமாக மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் நிர்மலா தேவு பேசியிருந்தார்.

நிர்மலா தேவி மாணவிகளுடன் பேசிய ஆடியோ, சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியதை அடுத்து, கல்லூரி முன்பு மாணவர்களின் பெற்றோர்களும், மாதர் சங்கத்தைச் சேர்ந்தவர்களும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அவரை கைது செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர். இதனை அடுத்து, பேராசிரியை நிர்மலா தேவியை கல்லூரி நிர்வாகம் தற்காலிக பணியிடை நீக்கம் செய்தது.

இந்த நிலையில், கல்லூரி நிர்வாகம் நிர்மலா தேவி மீது போலீசில் புகார் அளித்தது. இந்த புகாரின் பேரில், நிர்மலா தேவியின் போலீசார் சென்றனர். அப்போது நிர்மலா தேவி உட்பக்கமாக பூட்டிக் கொண்டு வீட்டினுள் இருந்துள்ளார். 5 மணி நேரத்துக்கும் மேலாக உள்ளிருந்த நிர்மலா தேவியை, போலீசார் வீட்டின் பூட்டை உடைத்து கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நிர்மலா தேவியிடம் விடிய விடிய போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்.

மாணவிகளை பாலியல் தொழிலுக்கு வற்புறுத்திய நிர்மலா தேவி விவகாரத்தில் சிபிசிஐடி வேண்டும் என்று கோரிக்கையை எழுந்துள்ளது. 

PREV
click me!

Recommended Stories

ரயிலில் டிக்கெட் கிடைக்கலையா? டோன்ட் வொரி.. கிறிஸ்துமஸ் விடுமுறை சிறப்பு பேருந்துகள்.. முழு விவரம் இதோ!
GEN Z வாக்குகளுக்கு குறிவைத்த திமுக! மா.செ.களுக்கு ஸ்டாலின் முக்கிய உத்தரவு! விஜய் ஷாக்!