பிப்ரவரி 18 ஆம் தேதி தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி!

Published : Jan 30, 2024, 11:40 AM IST
பிப்ரவரி 18 ஆம் தேதி தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி!

சுருக்கம்

பிரதமர் மோடி பிப்ரவரி 18 ஆம் தேதி தமிழகம் வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

நாடாளுமன்றத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் தமிழகத்தில் குறிப்பிடத்தக்க தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என பாஜக முனைப்பு காட்டி வருகிறது. அதற்காக மத்திய அமைச்சர்கள் அடிக்கடி தமிழ்நாடு வருகை புரிந்து வருகின்றனர். குறிப்பாக, பிரதமர் மோடியே அடுத்தடுத்து தமிழகம் வந்து கொண்டிருக்கிறார்.

நடப்பாண்டில் மட்டும் இதுவரை இரண்டு முறை தமிழகம் வந்துள்ள பிரதமர் மோடி, பிப்ரவரி 18 ஆம் தேதி மீண்டும் தமிழகம் வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக விழாவில் கலந்து கொண்டு, பல்வேறு நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைப்பதற்காக கடந்த 2ஆம் தேதி பிரதமர் மோடி தமிழகம் வந்தார். அதன்பிறகு, கேலோ இந்தியா இளையோர் விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைப்பது உள்ளிட்ட ஆன்மீக சுற்றுலாவுக்காக கடந்த 19ஆம் தேதி மூன்று நாட்கள் பயணமாக பிரதமர் தமிழ்நாடு வந்து சென்றார்.

அந்த சமயத்திலேயே அவர் திருப்பூருக்கு செல்ல திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், ராமர் கோயில் திறப்பு உள்ளிட்ட காரணங்களால் அவரது திருப்பூர் பயணமும், அவர் கலந்து கொள்ளவிருந்த பொதுக்கூட்டமும் தள்ளி வைக்கப்பட்டது.

5 ட்ரில்லியன் ஜிடிபிக்கு இன்னும் 3 வருஷந்தான்... இந்திய பொருளாதாரம் 3வது இடம் பிடிக்கும்: நிதி அமைச்சகம்

இந்த நிலையில், பிரதமர் மோடி வருகிற பிப்ரவரி மாதம் 18ஆம் தேதி தமிழ்நாடு வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் மூலம் 2024ஆம் ஆண்டில் மூன்றாவது முறையாக பிரதமர் மோடி தமிழ்நாடு வருகிறார். இப்பயணத்தின் போது திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடைபெறும் பிரம்மாண்ட மாநாட்டில் அவர் பங்கேற்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, ‘என் மண் என் மக்கள்’ எனும் பெயரில் மாநிலம் முழுவதும் யாத்திரை செல்கிறார். இதனை ராமேஸ்வரத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தொடங்கி வைத்தார். அண்ணாமலையின் என் மண், என் மக்கள் யாத்திரை பிப்ரவரி 18ஆம் தேதி திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நிறைவு பெறுகிறது. இந்த நிறைவு விழாவில் பங்கேற்க பிரதமர் மோடி தமிழகம் வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அத்துடன், பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் பிரதமர் மோடி தொடங்கி வைக்கவுள்ளார்.

மாலத்தீவு சுற்றுலா தரவரிசை: 5ஆவது இடத்துக்கு சென்ற இந்தியா!

என் மண், என் மக்கள் யாத்திரையின் நிறைவு விழாவை  பிரமாண்டமாக நடத்த தமிழக பாஜக திட்டமிட்டுள்ளது. அதை பாஜகவின் தேர்தல் பிரச்சாரத் தொடக்க விழாவாக நடத்தவும் அக்கட்சி திட்டமிட்டுள்ளது. இந்த விழாவுக்கு பின்னர், பாஜகவின் முக்கிய நிர்வாகிகளை சந்தித்து மக்களவை தேர்தல் பணிகள் தொடர்பாக பிரதமர் மோடி ஆலோசிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

தமிழகத்தில் இருந்து சபரிமலை ஐயப்ப பக்தர்களுக்கு லாரி லாரியாக சென்ற பிஸ்கெட்! மாஸ் காட்டும் அறநிலையத்துறை!
மன்னார்குடியில் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து! அலறி துடித்த பயணிகளின் நிலை என்ன?