நாட்டின் பல்வேறு முக்கிய நகரங்கள் இடையே தற்போது 47 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன.
சென்னை சென்ட்ரல் - மைசூரு இடையே மேலும் ஒரு வந்தே பாரத் ரயிலை காணொலி வாயிலாக பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
நாட்டின் பல்வேறு முக்கிய நகரங்கள் இடையே தற்போது 47 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன. தெற்கு ரயில்வேயில், சென்னை சென்ட்ரலில் இருந்து கோவை, மைசூரு, விஜயவாடா ஆகிய நகரங்களுக்கும், சென்னை எழும்பூர் - நெல்லை, திருவனந்தபுரம் - காசர்கோடு உள்ளிட்ட வழித்தடங்களிலும் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரயில் பொதுமக்களின் மத்தியில் நல்ல வரவேற்றை பெற்றுள்ளது.
இந்நிலையில், சென்னை சென்ட்ரல் - கர்நாடக மாநிலம் மைசூரு இடையே கூடுதலாக ஒரு வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார். அதேபோல் லக்னோ-டேராடூன், கலபுா்கி-பெங்களூரு, ராஞ்சி-வாரணாசி, டெல்லி (நிஜாமுதீன்) - கஜுரஹோ, செகந்திராபாத்-விசாகப்பட்டினம், நியூ ஜல்பைகுரி-பாட்னா, லக்னோ-பாட்னா, அகமதாபாத்-மும்பை, பூரி-விசாகப்பட்டினம் என மொத்தம் 10 வழித்தடங்களில் புதிய வழித்தடங்களில் புதிய வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்தார்.
சென்னை-மைசூரு இடையேயான வந்தே பாரத் ரயில் ஏப்ரல் 4ம் தேதி வரை சென்னை சென்ட்ரல் - பெங்களூரு இடையே மட்டும் இயக்கப்படும். அதன்பிறகு மைசூரு வரை நீட்டிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை-மைசூரு இடையேயான 2-வது வந்தே பாரத் ரயில் தொடக்க விழாவில் ஆளுநர் ஆா்.என்.ரவி, மத்திய இணையமைச்சர் எல்.முருகன் ஆகியோா் கலந்து கொண்டனர்.