“ஹேய்… ஜாலி…. பெட்ரோல் விலை குறைஞ்சிடுச்சு…..” - வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி…!!!

Asianet News Tamil  
Published : May 16, 2017, 12:07 AM ISTUpdated : Sep 19, 2018, 12:37 AM IST
“ஹேய்… ஜாலி…. பெட்ரோல் விலை குறைஞ்சிடுச்சு…..” - வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி…!!!

சுருக்கம்

petrol diesel price low today midnight

தமிழகத்தில் நள்ளிரவு 12 மணி முதல் பெட்ரோல், டீசல் விலை குறைந்துள்ளது. பெட்ரோல் லிட்டருக்கு குறைக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே 15ம் தேதி நள்ளிரவில் பெட்ரோலுக்கான புதிய விலை அமல்படுத்தப்படும் என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்தன. அதன்படி, பெட்ரோல் லிட்டருக்கு ரூ.2.16, டீசல் லிட்டருக்கு ரூ.2.10 என குறைக்கப்பட்டுள்ளது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஏற்ற, இறக்கத்தை பொறுத்தும், டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பை பொறுத்தும் இந்திய எண்ணெய் நிறுவனங்கள் 15 நாட்களுக்கு ஒருமுறை பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மாற்றி அமைத்து வருகின்றன.

கடந்த ஏப்ரல் 30ம் தேதி பெட்ரோல், டீசல் விலையில் சிறிய அளவில் மாற்றம் கொண்டு வந்தது. அப்போது, பெட்ரோல் லிட்டருக்கு 1 பைசா, டீசல் லிட்டருக்கு 44 பைசா விலை என விலை உயர்த்தியது.

இந்நிலையில், இன்று முதல் பெட்ரோல் ரூ.2.16 என்றும், டீசல் ரூ.2.10 எனவும் விலை குறைக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் பெட்ரோல், டீசல் தினமும் மாற்றப்பட்டு, அமலுக்கு வருவது குறிப்பிடத்தக்கது.

PREV
click me!

Recommended Stories

Holiday Special Bus: இரண்டு நாட்கள் விடுமுறை.. சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு! எந்தெந்த ஊர்களுக்கு எவ்வளவு பேருந்துகள்?
ஜூன் 25 கடைசி நாள்! 10 கிராம் தங்கம் மற்றும் ரூ.50,000 ரொக்கப்பரிசு! தமிழக அரசின் சூப்பர் அறிவிப்பு! விண்ணப்பிப்பது எப்படி?