ஒரு மாதமாக குடிநீர் வினியோகம் இல்லாததால் மக்கள் ஆத்திரம்; ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முற்றுகை...

First Published Feb 28, 2018, 11:33 AM IST
Highlights
People are angry because there is no water supply for a month The scam of the Panchayat Union office ...


திண்டுக்கல்

திண்டுக்கல்லில் ஒரு மாதமாக குடிநீர் வினியோக இல்லாததால் ஆத்திரமடைந்த மக்கள் தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள்.

திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே தொப்பம் பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் முத்துநாயக்கன்பட்டி ஊராட்சியில் குமாரபாளை யம் கிராமம் உள்ளது.

இந்த கிராமத்துக்கு கடந்த ஒரு மாதமாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த மக்கள் நேற்று காலையில் தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை வெற்றுக் குடங்களுடன் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். காலை 10 மணிக்கு தொடங்கிய போராட்டம் பிற்பகல் 1 மணி வரை நடைப்பெற்றது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் வட்டார வளர்ச்சி அலுவலர் ஈஸ்வரி மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று போராட் டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பின்னர் மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இந்த பிரச்சனை குறித்து மக்கள், "எங்கள் கிராமத்தில் கடந்த ஒரு மாதமாக குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால் நாங்கள் மிகுந்த அவதிப்பட்டு வருகிறோம்.

எங்கள் கிராமத்தில் 5 ஆழ்குழாய் கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் எதிலும் தண்ணீர் வருவதில்லை. இக்கிராமத் திற்கு அருகே உள்ள மிடாப்பாடி ஊராட்சிக்கு அமராவதி ஆற்றில் இருந்து தண்ணீர் கொண்டு வரப்படுகிறது. எங்க ளுக்கும் இதேபோல் அமரா வதி ஆற்றில் ஆழ்குழாய் கிணறு அமைத்து தண்ணீர் கொண்டு வரவேண்டும்.

மேலும், எங்கள் பகுதியில் கடந்த 2 மாதங்களாக தெரு விளக்குகள் எரிவதில்லை. எங்கள் கிராம மக்களை 100 நாள் வேலைக்கு அனுமதிப்பதில்லை. இதனால் நாங்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி உள்ளோம்" என்று தெரிவித்தனர்.

இதுகுறித்து வட்டார வளர்ச்சி அலுவலர் ஈஸ்வரி, "மக்களுக்கு குடிநீர் வசதி செய்யவும் தெரு விளக்குகளை உடனடியாக சீரமைக்கவும், கிராம மக்களின் பிரச்சனைகளை உடனடியாக தீர்க்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.

 

click me!