கொக்கோ கோலா இல்லைனா என்ன? பாம் கோலா இருக்கே…இளைஞர்கள் உற்சாகம்…

 
Published : Feb 03, 2017, 07:52 AM ISTUpdated : Sep 19, 2018, 03:03 AM IST
கொக்கோ கோலா இல்லைனா என்ன? பாம் கோலா இருக்கே…இளைஞர்கள் உற்சாகம்…

சுருக்கம்

கொக்கோ கோலா இல்லைனா என்ன? பாம் கோலா இருக்கே…இளைஞர்கள் உற்சாகம்…

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் மார்ச் மாதம் 1 ஆம் தேதி முதல் பெப்சி, கோக் விற்பனை செய்ய முடியாது என  வணிகர் சங்கங்கள்  அறிவித்துள்ளன.

இதனையடுத்து பனை வெல்லத்தாலான குளிர் பானங்களின் உற்பத்தியை அதிகரிக்க, கதர் கிராம தொழில்கள் ஆணையம் உற்சாகமாக களமிறங்கியுள்ளது

.

ஜல்லிக்கட்டு விதிக்கப்பட்ட தடையை நீக்கக்கோரி தமிழகம் முழுவதும் நடைபெற்ற பிரம்மாண்ட போராட்டம், தமிழகத்தில் புரட்சியை ஏற்படுத்தியது.

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கிடைத்துடன்அ விவசாயிகள் தற்கொலை, வறட்சி, வெளிநாட்டு குளிர்பானங்களுக்கு தடை என விரிந்து கொண்டே சென்றது. 

இதன் தாக்கமாக 'வெளிநாட்டு குளிர்பானங்களான பெப்சி, கோக்கை புறக்கணிப்போம் என குரல்கள் கேட்டதுடன் அதன் விற்பனை பெருமளவு சரிந்தது.



இதனைத் தொடர்ந்து தமிழகம் மற்றும் புதுச்சேரியில்உள்ள  வணிகர் சங்கங்களும், பெப்சி, கோக் விற்பனையை மார்ச் 1 ஆம் தேதி முதல்  நிறுத்த இருப்பதாக அறிவித்தன.

இதனைத் தொடர்ந்து , உடல் ஆரோக்கியத்தை பாது காக்கும் காக்கும் உள்நாட்டு குளிர்பானங்கள், பதனீர், இளநீர், மோர் ஆகியவற்றின் மீது மக்களின் பார்வை திரும்பியுள்ளது.

இத்தகைய குளிர்பானங்கள்  தற்போது  திரையரங்குகளில் கூட இளநீர் விற்பனைக்கு வந்துள்ளன.

இந்நிலையில், பனை வெல்லத்தில் தயாரித்து, காதி பவன்களில் விற்பனை செய்யப்படும், குளிர் பானங்களின் விற்பனையை அதிகரிக்க, கதர் கிராம தொழில்கள் ஆணையம் முடிவு செய்துள்ளது.

தற்போது தமிழகத்தின் பல பகுதிகளில் பனை வெல்லம், தும்பு விற்பனை நிலையகளில் பனை பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படும் குளிர் பானங்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

இவை, பாம் கோலா, புருட்டோ ஆகிய பெயர்களில் ஆரஞ்ச், லெமன், நெல்லி, கிரேப், நன்னாரி உள்ளிட்ட சுவைகளில் தயாரிக்கப்படுகின்றன.

கோக், பெப்சிக்கு எதிரான இந்த புரட்சியைப் பயன்படுத்த பனை குளிர் பானங்களின்  உற்பத்தியை அதிகப்படுத்தி அவற்றை விற்பனை செய்ய அரசு முடிவு செய்துள்ளது.

இனி  உடலுக்கு தீங்கு விளைவிக்காத இயற்கை குளிர்பானங்களின், விற்பனையை விரைவில் எதிர்பாக்கலாம்.

 

 

PREV
click me!

Recommended Stories

முதல்வரோடு முருகன் கைகோத்துள்ளார்..! ஸ்டாலினிடம் இருந்து முருகனை யாராலும் பிரிக்க முடியாது..! சேகர்பாபுவின் முரட்டு முட்டு..!
தனி அறையில் 45 வயது பெண்.. விடாமல் இரவு முழுவதும் 5 பேர்.! மறுநாள் மரணம்.. நடந்தது என்ன?