பீட்டா அமைப்பை ஒழிக்க வேண்டும்…ஜல்லிக்கட்டுக்கான ஆதரவு சங்கங்கள் சபதம்..

Asianet News Tamil  
Published : Jan 08, 2017, 08:51 AM ISTUpdated : Sep 19, 2018, 02:57 AM IST
பீட்டா அமைப்பை ஒழிக்க வேண்டும்…ஜல்லிக்கட்டுக்கான ஆதரவு சங்கங்கள் சபதம்..

சுருக்கம்

பீட்டா அமைப்பை ஒழிக்க வேண்டும்…ஜல்லிக்கட்டுக்கான ஆதரவு சங்கங்கள் சபதம்..

தமிழர்களின் பாராம்பரிய விளையாட்டான ஜல்லிகட்டுக்கு உச்சநீதிமன்றம் தடைவிதித்துள்ளதையடுத்து கடந்த சில ஆண்டுகளாக பொங்கல் பண்டிகை களை இழந்து கானப்படுகிறது. 

ஜல்லிக்கட்டுக்கு பெயர்போன மதுரை மாவட்டம் அலங்காநல்லுர், அவனியாபுரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் சோகத்துடன் உள்ளனர்.

ஜல்லிகட்டுக்கு எப்படியாவது அனுமதி கிடைத்துவிடும் என ஜல்லிக்கட்டு ஆதரவாளகளும், காளை வளர்ப்போரும் காளைகளை தயார் செய்து வருகின்றனர்

மதுரை,தேனி மாவட்ட மக்கள் பொங்கல் பண்டிகையின் போது ஜல்லிகட்டை நடத்திகே தீர வேண்டும் என கங்கனம் கட்டிக்கொண்டு வேலைசெய்து வருகின்றனர்.

உச்சசீதிமன்றம் அனுமதி வழங்கவில்லை என்றாலும் கூட தடையை மீறி ஜல்லிகட்டு நடத் வேண்டும் என கூறி வருகின்றனர். ஜல்லிகட்டு நடத்துவதற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும் என்றும் அந்த அமைப்பை ஒழிக்க வேண்டும் என்றும் ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர்.

இதனிடையே ஜல்லிக்கட்டுக்கு தங்களது காளைகளை தயார் செய்து வருகின்றனர் காளை வளர்ப்போர். அதேபோல் மாடுபிடி வீரர்களும் காளைகளை அடக்க தங்களது தோள்களை தயார் செய்து வருகின்றனர்.

ஏராளமான கிராம மக்கள் ஜல்லிக்கட்டு இல்லாத பொங்கலை கொண்டாடப்போவதில்லை என சோகத்துடன் கூறி வருகின்றனர்.

இதனிடையே ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும், பீட்டா அமைப்புக்கு எதிராகவும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இன்று சென்னை மெரினா கடற்கரையில் ஊர்வலமாக சென்றனர். தமிழர்களின் உணர்வுகளுக்கு எதிரான பீட்டா அமைப்பை ஒழிப்பதே தங்களது லட்சியம் என சபதமேற்றனர்.

 

PREV
click me!

Recommended Stories

விஜய்க்கு 'கை' கொடுத்த ராகுல்.. கூட்டணிக்கு அச்சாரமா? பிரவீன் சக்கரவர்த்தி சொன்ன விளக்கம்!
சென்னையில் இனி தண்ணீர் பிரச்சனையில்லை.. குடிநீர் ஆதாரங்களை இணைக்கும் 'மெகா' திட்டம்! சூப்பர்!