பணிகள் முடியாத பூங்காவை திறக்கவைத்து ஆளுநரையே ஏமாற்றி இருக்காங்க! மாநகராட்சி நிர்வாகத்தை மாட்டிவிடும் மக்கள்...

First Published Aug 7, 2018, 1:53 PM IST
Highlights

திண்டுக்கல்லில் பணிகள் முழுவதுமாக முடியாத பூங்காவை திறக்கவைத்து ஆளுநரை ஏமாற்றி உள்ளனர். 

திண்டுக்கல் மாவட்டம், ஆர்.எம்.காலணியில் அம்ரூத் திட்டத்தின்கீழ் கடந்த 2016-17 ஆம் ஆண்டி ரூ.1.20 கோடி செலவில் பூங்கா ஒன்று அமைக்கும் பணி நடந்தது. பணிகள் முழுமையாக முடிந்த நிலையில் திண்டுக்கல் வந்த தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இந்த பூங்காவை அரைகுறையாக இருக்கும்போதே திறந்துவைத்தார். 

ஆளுநர் திறந்துவைத்துவிட்டு சென்றபிறகு மக்களின் பயன்பாட்டிற்காக மூன்று நாள்கள் பூங்கா இயங்கியது. பின்னர், பூங்காவில் பணிகள் நடைபெறுகிறது என்று பலகை வைத்துவிட்டு மாநகராட்சி நிர்வாகம் பூட்டி வைத்துவிட்டது.

இதனை கேள்விப்பட்ட மக்கள் மாநகராட்சி நிர்வாகத்தின் கடும் கோபத்தில் இருக்கின்றனர்.  ஆளுநர் கையால் பூங்காவை திறந்து வைக்கிறார் என்றதும் மர இருக்கைகள், சிறுவர் ஊஞ்சல், செயற்கை நீருற்று, பூச்செடிகள் என அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தனர். 

திறக்கப்பட்ட மூன்று நாள்களில் பூங்காவில் இருந்த இருக்கைகள், ஊஞ்சல், பூச்செடிகள் என அனைத்தும் அகற்றப்பட்டது. அதுமட்டுமின்றி, பூங்காவைப் பயன்படுத்த காலை, மாலை நேரங்களில் வரும் பொதுமக்கள் பூங்கா மூடியிருப்பதைக் கண்டு ஏமாற்றத்தோடு திரும்புகின்றனர்.

ஆளுநருக்காக பூங்காவில் அனைத்து ஏற்பாடுகளும் அவசர அவசரமாக அமைக்கப்பட்டது. இருந்தும் எதையும் முழுவதுமாக முடிக்கவில்லை. பணிகள் முடியாத பூங்காவை திறக்கவைத்து ஆளுநரையே ஏமாற்றி இருக்காங்க. திறந்த பூங்காவை மூடி மக்களையும் ஏமாற்றி உள்ளனர் என்று மாநகராட்சி நிர்வாகம் மீது மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

click me!