
பெண்ணே பெண்ணை திருமணம் செய்த சுவாரஸ்யம் நிகழ்வு ஆந்திராவில் நடந்துள்ளது.அதுவும் ஒரு பெண் அல்ல...ஒரே ஒரு பெண் மூன்று பெண்களை மணந்துள்ளார்.
ஆந்திர மாநிலம் கடப்பாவில் உள்ள ஈடுகலபாடு கிராமத்தைச் சேர்ந்தவர் ரமாதேவி,வயது 18, இந்தபெண் ஆண்களைப் போல் முடிவெட்டியும்,பேன்ட் சர்ட் அணிந்து ஆண்களை போலவே நடை உடை என அனைத்தையும் மாற்றி உள்ளார் எந்த ஒரு சாமானிய மனிதனாலும் கண்டு பிடிக்க முடியாத அளவிற்கு,ஒரு ஆண் போலவே தோன்றி உள்ளார்.
3 பேரை திருமணம்
ஆண் போல் நடந்துக்கொண்ட ரமா தேவி,மூன்று பெண்களை ஏமாற்றி திருமணம் செய்துள்ளார்.
ஒருவரை திருமணம் செய்த பின்னர் உடனடியாக அவசர வேலை என்று கூறி,வெளி ஊருக்கு சென்று விடுவாராம்.இது போன்று தொடர்ந்து செய்து வந்துள்ளார்.இந்நிலையில் மூன்றாவதாக திருமணம் செய்த பெண் பெயர் மோனிகா.
ரமாதேவியின் நடத்தையில் சந்தேகம் அடைந்தவர், தான் திருமணம் செய்த நபர் பெண் என்று தெரிந்தவுடன்,காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இது குறித்து வழக்கு தொடர்ந்த போலீசார்,எதற்காக அந்த பெண் இது போன்று செய்துள்ளார் என்று தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முழுமையான விசாரணை முடிவுற்ற பின்னரே உண்மை வெளிவரும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.