மெக்கானிக் கழுத்தறுத்து கொலை! அதிகாலையில் பயங்கரம்

 
Published : Oct 31, 2017, 04:23 PM ISTUpdated : Sep 19, 2018, 01:22 AM IST
மெக்கானிக் கழுத்தறுத்து கொலை! அதிகாலையில் பயங்கரம்

சுருக்கம்

One person killed police investigation

பள்ளிவாசலுக்கு தொழுகைக்கு செல்லும்போது, மர்ம நபர்களால் ஒருவர் கழுத்தறுபட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் கிருஷ்ணகிரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே அச்செட்டிப் பள்ளியைச் சேர்ந்தவர் சமியுல் லாகான். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இவர் அந்த பகுதியில் உள்ள குந்து மாரனப்பள்ளியில் இரு சக்கர வாகனம் பழுது பார்க்கும் வேலை செய்து வருகிறார்.

இவர், தினமும் தொழுகைக்காக, அச்செட்டிப்பள்ளியில் உள்ள மசூதிக்கு செல்வது வழக்கம். அதேபோல் இன்று அதிகாலை 4 மணியளவில் தொழுகைக்காக மசூதிக்கு சென்றுள்ளார்.

மசூதி செல்லும் வழியில் சமியுல்-ஐ, மர்ம நபர்களால் அவர் படுகொலை செய்யப்பட்டார். சமியுல், கழுத்தறுபட்ட நிலையில் சாலையில் அவரது உடல் கிடந்துள்ளது.

இதனைப் பார்த்த பொதுமக்கள், அருகில் உள்ள காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், உடலைக் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். 

இந்த கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அச்செட்டிப்பள்ளியில் இன்று அதிகாலை நடந்த கொலை சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

PREV
click me!

Recommended Stories

ஆட்டம் ஆரம்பம்..! நேற்று ராஜாஜி... இன்று சுப்பிரமணிய பாரதி.. தமிழர்களுக்கு மோடி மரியாதை
திமுகவை வீழ்த்த நினைப்பவர்கள் காணாமல் போய்விடுவார்கள்..! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கொக்கரிப்பு