ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தைக் கைவிட வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் தலைமையில் அக்கட்சியின் குழு நேரில் சென்று வலியுறுத்தியுள்ளது
நாடாளுமன்ற மக்களவை, மாநில சட்டப்பேரவை, நகராட்சிகள் மற்றும் பஞ்சாயத்துகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்து ஆய்வு செய்து, விரைவில் பரிந்துரைகளை வழங்க எட்டு பேர் கொண்ட உயர்மட்டக் குழுவை கடந்த ஆண்டு செப்டம்பர் 2ஆம் தேதி மத்திய அரசு அமைத்தது.
முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில், உள்துறை அமைச்சர் அமித் ஷா, ராஜ்யசபா முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத், நிதி ஆயோக் முன்னாள் தலைவர் என்.கே.சிங், மக்களவை முன்னாள் பொதுச் செயலாளர் சுபாஷ் சி காஷ்யப், மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே, முன்னாள் தலைமை விஜிலென்ஸ் கமிஷனர் சஞ்சய் கோத்தாரி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
undefined
காங்கிரஸுக்கு 17 தொகுதிகளை ஒதுக்கும் சமாஜ்வாதி: இதுதான் கடைசி ஆஃபர்!
அதன் தொடர்ச்சியாக, தங்களது பணியை தொடங்கிய உயர்மட்ட குழு, ஒரே நேரத்தில் தேர்தல்களை நடத்துவது குறித்து பொதுமக்களிடம் இருந்து ஆலோசனைகளை கேட்டு செய்தித்தாள்களில் அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி, ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக பொதுமக்களிடம் இருந்து உயர்மட்ட குழுவுக்கு சுமார் 5000 கருத்துக்கள் சென்றுள்ளன. அதேபோல், சமீபத்தில் அரசியல் கட்சிகளுக்கு கடிதம் எழுதிய ஒரே நாடு ஒரே தேர்தல் குழு, அவர்களின் கருத்துகளை கோரியதுடன், நேரில் வந்து விவாதிக்கவும் அழைப்பு விடுத்திருந்தது.
ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தைக் கைவிட வேண்டும்
டெல்லியில் இன்று ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தில் உயர்மட்டக் குழு தலைவர் மேனாள் குடியரசுத் தலைவர் மாண்பமை திரு ராம்நாத் கோவிந்த் அவர்களை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் குழு சந்தித்தது pic.twitter.com/C80xv824oY
இந்த நிலையில், ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தைக் கைவிட வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் தலைமையில் அக்கட்சியின் குழு நேரில் சென்று வலியுறுத்தியுள்ளது. டெல்லியில் இன்று ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தின் உயர்மட்டக் குழு தலைவர் முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் குழு சந்தித்தது. அந்தத் திட்டம் தொடர்பான விசிகவின் கருத்துகள் அடங்கிய கடிதத்தைத் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் அளித்தார். நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார், சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பாலாஜி, ஆதவ் அர்ஜுன் ஆகியோர் உடனிருந்தனர்.