
3 நாட்களுக்கு வடகிழக்கு பருவமழை பெய்ய வாய்ப்பே இல்லை என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது..
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை வழக்கமாக அக்டோபர் மாதம் 20ம் தேதி தொடங்கும். 20–ந்தேதியில் இருந்து 8 நாட்களுக்கு முன்பாகவோ, 8 நாட்களுக்கு பின்பாகவோ தொடங்கினால் அது இயல்பாகும்.
தென் மேற்கு பருவமழை தமிழ்நாட்டில் இன்னும் விலகவில்லை. மத்திய மேற்கு வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை, இப்போது தீவிர காற்றழுத்த மண்டலமாக மாறி உள்ளது. அது அந்தமானில் இருந்து வடக்கே 312 கிலோ மீட்டர் தூரத்தில் நிலை கொண்டுள்ளது. இந்த தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலத்துக்கும் தமிழகத்துக்கும் எவ்வித சம்பந்தம் இல்லை.
இன்னும் 3 நாட்களுக்கு தமிழகத்தில் பருவமழை தொடங்குவதற்கு வாய்ப்பில்லை. 27ம் தேதிக்கு பிறகு தான் வடகிழக்கு பருவமழை தொடங்கும். அது எந்த தேதியில் தொடங்கும் என்று இப்போது எதுவும் கணிக்க முடியாது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.