
ஆர்.கே. நகர் தொகுதியில் இடைத் தேர்தல் நடைபெறுவதையொட்டி சென்னை மாவட்டத்தில் ஏப்ரல் 10ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரையும் வாக்கு எண்ணிக்கை நாளான 15 ஆம் தேதியும் மதுக்கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை ஆர்.கே. நகர் தொகுதிக்கு வரும் 12ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில், திமுக சார்பில் மருதுகணேஷ், சசிகலா அணி சார்பில் டிடிவி தினகரன், ஓபிஎஸ் அணி சார்பில் மதுசூதனன், பாஜக சார்பில் கங்கை அமரன், மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் லோகநாதன் மற்றும் சுயேட்சைகள் உள்பட 62 பேர் போட்டியிடுகின்றனர்.
தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில் அனைத்து வேட்பாளர்களும் பம்பரமாக சுழன்று வாக்காளர்களை சந்தித்து வருகின்றனர். ஒர சில இடங்களில் வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது.
பல இடங்களில் கட்சிகளிடையே கடும் போட்டி நிலவி வருவதால் தள்ளுமுள்ளு, தாக்குதல் உள்ளிட்ட சம்பவங்கள் நடைபெற்று வருவதால் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் வாக்கு எண்ணிக்கை நாளான ஏப்ரல் 15ஆம் தேதியும் மதுக்கடை மற்றும் பார்களையும் மூட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.இந்நிலையில் ஆர்.கே. நகர் தேர்தலையொட்டி சென்னை மாவட்டத்தில் ஏப்ரல் 10ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை மதுக்கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் அன்புசெல்வன் உத்தரவிட்டுள்ளார்.