
நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என வழக்கறிஞர் விஜயன் தாக்கல் செய்த மனுவை அவரசர வழக்காக நாளை மறுநாள் விசாரிக்கப்படும் என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பிளஸ் 2 முடித்த மாணவர்கள், எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., மருத்துவ படிப்பில் சேர, 'நீட்'தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்' என, மத்திய அரசு உத்தரவிட்டது.
இதையடுத்து தமிழகம் உட்பட அனைத்து மாநிலங்களிலும், கடந்த மாதம் 7 ம் தேதி நீட் தேர்வுநடத்தப்பட்டது. அதேநேரம், 'நீட்' தேர்வில் இருந்து, தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும்என , தமிழக சட்டசபையில் மசோதா நிறைவேற்றப்பட்டது.
அதற்கு, குடியரசுத் தலைவர் இது வரை ஒப்புதல் அளிக்கவில்லை. இந்நிலையில் நீட் தேர்வுகுறித்து, உச்ச நீதிமன்றத்தில், பல்வேறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
அவற்றின் தீர்ப்பு வெளிவராததால், மருத்துவ கவுன்சிலிங்கை, எப்படி நடத்துவது என, தமிழகசுகாதாரத் துறை குழப்பத்தில் உள்ளது.
இந்நிலையில், மருத்துவ கவுன்சிலிங்கின் தேதி தெரியாததால், இன்ஜினியரிங் கவுன்சிலிங்தேதியை முடிவு செய்வதில், உயர் கல்வித் துறையும் குழப்பத்தில் உள்ளது.
அதே நேரத்தில் நீட் தேர்வு முடிவுகளை வெளியாமல் சிபிஎஸ்இ காலம் தாழ்த்தி வருகிறது.
இதனிடையே நீட் தேர்வில் இருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்களிக்க வேண்டும் எனசென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் விஜயன் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கு அவசர வழக்காக எடுக்கப்பட்டு நாளை மறுநாள் விசாரிக்கப்படும் என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.