திரையரங்கில் தேசிய கீதத்துக்கு எதிர்ப்பு…நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்!

Asianet News Tamil  
Published : Jan 18, 2017, 07:55 AM ISTUpdated : Sep 19, 2018, 02:59 AM IST
திரையரங்கில் தேசிய கீதத்துக்கு எதிர்ப்பு…நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்!

சுருக்கம்

திரையரங்கில் தேசிய கீதத்துக்கு எதிர்ப்பு…நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்!

திரையரங்கினுள் தேசியகீதம் முடியும்வரை ஜல்லிக்கட்டு எதிர்ப்பாளர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாம் தமிழர் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  

நாடு முழுவதும் உள்ள திரையரங்குகளில் சினிமா திரையிடுவதற்கு முன் தேசிய கீதத்தை ஒலிபரப்ப வேண்டும். அப்போது திரையில் தேசியக்கொடியை ஒளிபரப்ப வேண்டும்.

இவ்வாறு தேசிய கீதம் ஒலிபரப்பாகும் போது திரையரங்கில் இருக்கும் மக்கள் அனைவரும் எழுந்து நின்று தேசிய கீதத்துக்கு மரியாதை செலுத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதனிடையே, கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள கே.ஜி திரையரங்கில், தேசிய கீதம் ஒளிபரப்ப எதிர்ப்பு தெரிவித்து நாம் தமிழர் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்துள்ள மத்திய அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.

திரையரங்கினுள் டிக்கெட் வாங்கி உள்ளே சென்ற அவர்கள், தேசியகீதம் முடியும்வரை ஜல்லிக்கட்டு எதிர்ப்பாளர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்துவிட்டு, பின்னர் டிக்கெட்டுகளை கிழித்துப் போட்டுவிட்டு தாங்களாகவே வெளியேறிச் சென்றனர்.

 

PREV
click me!

Recommended Stories

Radhan Pandit : இப்போ முதல்வர்.. அடுத்து பிரதமர்.. ரஷ்யா பிரச்சினையை விஜய் தீர்த்து வைப்பார்.. ஜோதிடர் பேச்சு
இந்திய அணியில் இடம்பிடித்த வைபவ் சூர்யவன்ஷி.. உலக நாடுகளை அலறவிடப்போகும் 15 வயது சூறாவளி!