கருத்து சுதந்திரத்திற்கு ஆதரவாக நின்ற நீதிமன்றத்தை வணங்குகிறேன்... நக்கீரன் கோபால் அதிரடி!

By vinoth kumarFirst Published Oct 9, 2018, 5:27 PM IST
Highlights

பத்திரிகை சுதந்திரத்துக்கும் கருத்து சுதந்திரத்துக்கும் ஆதரவாக நீதித்துறை செயல்படுவதாகவும், தனக்கு ஆதரவாக குரல் கொடுத்த அனைவருக்கும் நக்கீரன் கோபால் நன்றி தெரிவித்தார்.

பத்திரிகை சுதந்திரத்துக்கும் கருத்து சுதந்திரத்துக்கும் ஆதரவாக நீதித்துறை செயல்படுவதாகவும், தனக்கு ஆதரவாக குரல் கொடுத்த அனைவருக்கும் நக்கீரன் கோபால் நன்றி தெரிவித்தார். நக்கீரன் கோபால் இன்று தேச துரோக வழக்கில் கைது செய்யப்பட்டார். 

அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி துணை பேராசிரியர் நிர்மலா தேவி விவகாரத்தை பல பத்திரிகைகளும் மறந்துவிட்ட நிலையில், இவ்வழக்கு விசாரணை குறித்து நக்கீரன் இதழ் செல்தி வெளியிட்டு வருகிறது. நிர்மலா தேவி விவகாரம் தொடர்பாக செய்திகள் வராத நக்கீரன் இதழே இல்லை எனும் அளவுக்கு செய்திகள் வெளியிடப்பட்டு வருகிறது. அண்மையில் வெளியான நக்கீரன் இதழில், ஆளுநர் பன்வாரிலாலை, நிர்மலா தேவி 4 முறை சந்தித்ததாக செய்தி வெளியானது. 

இதன் அடிப்படையில் நக்கீரன் கோபால் இன்று கைது செய்யப்பட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. கைது செய்யப்பட்ட அவர், எழும்பூர் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த சென்னை எழும்பூர் நீதிமன்ற நீதிபதி கோபிநாத், நக்கீரன் கோபாலை சிறையில் அடைக்க மறுப்பு தெரிவித்தார். இதனை அடுத்து நக்கீரன் கோபால் விடுவிக்கப்பட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நக்கீரன் கோபால், பத்திரிகை சுதந்திரத்துக்கும் கருத்து சுதந்திரத்துக்கும் ஆதரவாக நீதித்துறை செயல்பட்டதாக கூறினார். 

கடந்த சில மாதங்களுக்கு முன்பு புலனாய்வு செய்து செய்தி ஒன்றை வெளியிட்டோம். அந்த செய்திக்காகத்தான் கைது செய்யப்பட்டுள்ளேன். இது நீதிமன்றம் வந்த பிறகே எனக்குத் தெரியும். நீதிமன்றம் பக்கபலமாக இருப்பதாலும், அதேபோல் எனக்கு திறமையான வகையில் நீதியை எடுத்துரைத்த எங்களுக்காக வாதாடிய அவர்களுக்கு வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். அனைத்து பத்திரிகை மற்றும் ஊடகங்களுக்கும் நன்றி.

click me!