கள்ளக்குறிச்சி ஆட்சியர் விவகாரத்தில் முதலமைச்சர் மௌனம் ஏன்?  நயினார் நாகேந்திரன் கேள்வி !

கள்ளக்குறிச்சி ஆட்சியர் விவகாரத்தில் முதலமைச்சர் மௌனம் ஏன்? நயினார் நாகேந்திரன் கேள்வி !

Published : Nov 13, 2026, 08:02 PM IST

சென்னையில் தமிழக பாஜக மேலிடப் பொறுப்பாளர் ராம் மாதவ் மற்றும் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் ஆகியோர் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய ராம் மாதவ், இந்தியத் தேர்தல் ஆணையத்தின் மீதும் ஜனநாயகத்தின் மீதும் காங்கிரஸ் கட்சி வேண்டுமென்றே அவதூறு பரப்பி வருவதாகக் குற்றம் சாட்டினார். தாங்கள் வெற்றி பெற்றால் தேர்தல் நியாயமாக நடந்ததாகவும், பாஜக வெற்றி பெற்றால் முறைகேடு நடந்ததாகவும் காங்கிரஸ் இரட்டை வேடம் போடுவதாகக் கூறிய அவர், தமிழகத்தில் தவெக வெற்றி பெற்றதை மக்கள் தீர்ப்பாக ஏற்றுக்கொள்வதாகவும், ஆனால் தவெக தங்கள் அரசியல் எதிரி என்பதால் களத்தில் எதிர்கொள்வோம் எனவும் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், முந்தைய திமுக ஆட்சிக்கும் தற்போதைய தமிழக வெற்றிக் கழக (TVK) ஆட்சிக்கும் எந்த விதமான வித்தியாசமும் இல்லை என்றும், மாநிலத்தில் கொலை, கொள்ளை மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளதாகவும் விமர்சித்தார். கள்ளக்குறிச்சி பெண் ஆட்சியர் விவகாரத்தில் முதலமைச்சர் விஜய் மௌனம் சாதிப்பது ஏன் எனக் கேள்வி எழுப்பிய அவர், காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் குற்றவாளிகளுக்கு வக்காலத்து வாங்குவதாகக் குற்றம் சாட்டினார். மேலும், நிலையற்ற நிர்வாகத்தால் தமிழகத்தின் ஜிஎஸ்டி வரி வருவாய் வளர்ச்சி மைனஸ் 5 சதவீதமாகச் சரிந்துள்ளதாகவும், ரூ.15,000 கோடி மதிப்பிலான தொழிற்சாலைகள் ஆந்திராவிற்குச் சென்றுவிட்டதாகவும் முதலமைச்சர் விஜய் மீது அவர் சரமாரி குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

03:46கள்ளக்குறிச்சி ஆட்சியர் விவகாரத்தில் முதலமைச்சர் மௌனம் ஏன்? நயினார் நாகேந்திரன் கேள்வி !
03:41குற்றவாளியைப் பாதுகாப்பதா மாற்றம்? - தவெக அரசைக் கண்டித்து பெண்கள் மாதர் சங்கத்தினர் போராட்டம் !
03:26திருச்சி முக்கொம்பு மேலணையில் அமைச்சர் ஆனந்த் திடீர் ஆய்வு: ரூ.142 கோடி புனரமைப்புப் பணிகள் தீவிரம்!
03:05சட்டம்-ஒழுங்கு சீர்குலைவு, விலைவாசி உயர்வு: ஆளும் அரசு மீது எடப்பாடி பழனிசாமி சரமாரி குற்றச்சாட்டு!
03:38நாட்டில் என்ன நடக்கிறது என்றே தெரியாமல் முதலமைச்சர் இருக்கிறார்! - ஜெயக்குமார் அதிரடி பேட்டி
05:22மேகதாது விவகாரம் : கர்நாடகாவின் கனவு பலிக்காது - துரைமுருகன் அதிரடி பேட்டி!
03:33கோவை மாவட்ட வரைவு வாக்காளர் பட்டியல் 2027 வெளியீடு: மாவட்ட ஆட்சியர் பவன்குமார் வெளியிட்டார்!
03:35பக்தி இசை நிகழ்ச்சி நடத்தும் பெரும் பாக்கியம் கிடைத்ததாக இளம் பாடகி தியா நெகிழ்ச்சி!
04:46தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிய அரசு : சேலத்தில் இ.பி.எஸ் தவெக அதிரடி பேச்சு !