மர்ம நபர்களால் பலாத்காரம் செய்ய முயன்ற தாய் – மகள் கவலைக்கிடம்!

 
Published : Feb 28, 2018, 10:49 AM ISTUpdated : Sep 19, 2018, 02:00 AM IST
மர்ம நபர்களால் பலாத்காரம் செய்ய முயன்ற தாய் – மகள் கவலைக்கிடம்!

சுருக்கம்

Mother daughter trying to rape by mysterious people

பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற மர்ம கும்பல் தாக்கியதில் காயமடைந்த மாணவி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைபிரிவில் ஆபத்தான நிலையில் கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள வெள்ளம்புத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆராயி. இவரது மகள் தனம், மகன் சமயன். இவர்களில் தனம் அதே பகுதியில் உள்ள பள்ளியில் 8-ம் வகுப்பும், சமயன் 4-ம் வகுப்பும் படித்து வந்தனர்.

கடந்த 21-ந் தேதி இரவு வீட்டில் ஆராயி தனது மகள், மகனுடன் தூங்கி கொண்டிருந்தார். நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள் ஆராயி உள்பட 3 பேரையும் உருட்டுக்கட்டையால் தலையில் தாக்கி விட்டு ஓடி விட்டனர்.

இந்த தாக்குதலில், படுகாயம் அடைந்த சமயன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக துடிதுடித்து இறந்தான். உயிருக்கு போராடி கொண்டிருந்த ஆராயி, தனம் ஆகியோரை அக்கம்பக்கத்தினர் மீட்டு புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

குற்றவாளிகளை கண்டுபிடிக்க 7 தனிப்படை அமைக்கப்பட்டது. அரகண்டநல்லூர் இன்ஸ்பெக்டர் ஜெயவேல் விசாரணை நடத்தி வந்தார். அவரை மாற்றி விட்டு துணை போலீஸ் சூப்பிரண்டு அசோக்குமார் நியமிக்கப்பட்டார். அவர் தனிப்படை போலீசாருடன் வெள்ளம்புத்தூர் சென்று கிராம மக்களிடம் விசாரணை நடத்தினார். ஆராயி மற்றும் அவரது மகள் தனத்தை மர்ம மனிதர்கள் தாக்கி பலாத்காரம் செய்ய முயன்ற போது அதை தடுக்க முயன்ற மாணவன் சமயன் தாக்கப்பட்டு இறந்திருக்கலாம் என்று தெரிய வந்தது.

இந்த நிலையில் ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள ஆராயி, அவரது மகள் தனம் ஆகியோருக்கு டாக்டர்கள் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். தனம் 3-வது மாடியில் உள்ள நரம்பியல் சிகிச்சை பிரிவிலும், தாய் ஆராயி பெண்கள் வார்டிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 2 பேருமே கோமா நிலையில் இருந்து வருவதால் அவர்கள் டாக்டர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்து வருகின்றனர்.

மாணவி தனத்தின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதால் அவர் கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையே தாய் - மகள் 2 பேரும் பலாத்காரம் செய்யப்பட்டனரா? என்பதை கண்டறிய அவர்கள் இருவருக்கும் இன்று மருத்துவ பரிசோதனை செய்யபடவிடுக்கிரதாம்.

PREV
click me!

Recommended Stories

திருவள்ளூர் சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்.. நாட்டையே உலுக்கிய சம்பவம்.. கயவனுக்கு இரட்டை ஆயுள் தண்டனை!
கண்ணாடி முன் நின்று கல்லெறியும் திமுக.. ஸ்டாலினுக்கு சுளுக்கெடுத்த தளபதி விஜய்!