அரிசி கடத்தலில் ஈடுபட்டால் பணியிடை நீக்கம்..குற்ற வழக்கு போடப்படும்.. அமைச்சர் எச்சரிக்கை..

Published : Jan 31, 2022, 05:50 PM IST
அரிசி கடத்தலில் ஈடுபட்டால் பணியிடை நீக்கம்..குற்ற வழக்கு போடப்படும்.. அமைச்சர் எச்சரிக்கை..

சுருக்கம்

அரிசி கடத்தல் போன்ற முறைகேடுகளில் ஈடுபட்டால் ரேஷன் கடை பணியாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூட்டுறவு துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார். மேலும் குற்ற வழக்கு தொடரப்பட்டு சம்பந்தப்பட்ட பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்படுவர் என்று எச்சரித்துள்ளார்.  

சென்னை தாம்பரம் அடுத்த முடிச்சூர் லட்சுமி நகர் 2வது பிரதான சாலையில்  உள்ள ரேஷன் கடை நேற்று முன்தினம் இரவு திறக்கப்பட்டு அங்கிருந்து ரேஷன் அரிசி மூட்டைகள் சரக்கு வாகனத்தில் ஏற்பட்டது. இதை அப்பகுதி மக்கள் பார்த்து ஊழியர்களிடம் கேட்க சென்றனர். அப்போது, அங்கிருந்து அவர்கள் தப்பிச்செல்ல முயன்றனர். தொடர்ந்து ரேஷன் கடை ஊழியர்கள் மற்றும் வாகன ஓட்டுனர் ஆகியோரை பொதுமக்கள் பிடித்து பீர்க்கன்காரணை போலீசாரிடம் ஒப்படைத்தனர். பின்னர் போலீசார் பிடிபட்டவர்களை தென் சென்னை குடிமைபொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு போலீசாரிடம் ஒப்படைத்தனர். 

விசாரணையில், ரேஷன் கடை ஊழியர்கள் கோமதி மற்றும் சஞ்சீவி ஆகியோரின் உதவியுடன் 2 டன் அரிசி மூட்டைகள் வெளி மாநிலங்களுக்கு விற்பனை செய்ய கடத்த இருந்தது தெரியவந்தது. இதையடுத்து ரேஷன் கடை ஊழியரான கோமதி, சரக்கு வாகன உரிமையாளர் ராகுல்ராஜ், அரிசி மூட்டைகளை கடத்திய ராஜேந்திர பாண்டியன், பொன்சங்கர நாராயணன் ஆகியோரை கைது செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள சஞ்சீவியை போலீசார் தேடி வருகின்றனர்.

இந்நிலையில் அரிசி கடத்தல் போன்ற முறைகேடுகளில் ஈடுபட்டால் ரேஷன் கடை பணியாளர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் ஐ.பெரியசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார். குற்ற வழக்கு தொடரப்பட்டு சம்பந்தப்பட்ட பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்படுவர் என தெரிவித்தார். முடிச்சூரில் ரேஷன் அரிசியை வேனில் கடத்த முயன்றபோது விற்பனையாளர் கோமதி கைது செய்யப்பட்ட நிலையில், அவர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

விஜயை வைத்து பூச்சாண்டி..! வெறுப்பின் உச்சத்தில் ஸ்டாலின்..! காங்கிரஸை கழற்றிவிட திமுக அதிரடி முடிவு..!
சுய விளம்பரத்தில் திளைக்கும் முதல்வரே... இருக்கப் போகும் 4 மாதங்களிலாவது கவனம் செலுத்துங்கள்..! க்ரைம் பட்டியலை அடுக்கிய இபிஎஸ்..!