கடலில் பேனா நினைவு சின்னம் அமைக்கப்படுகிறதா.? நினைவிடப் பணி எந்த நிலையில் உள்ளது.? அமைச்சர் எ.வ வேலு தகவல்

By Ajmal Khan  |  First Published Aug 2, 2023, 1:24 PM IST

இரண்டாம் கட்ட பணி தான் கடலில் பேனா நினைவு சின்னம் நிறுவுவது என தெரிவித்த அமைச்சர் எ.வ வேலு,  அதற்கான மதிப்பீடு தயார் செய்யப்படவில்லை என்றும், கருணாநிதி நினைவிட கட்டுமான பணி தற்போது 90 சதவீதம் நிறைவடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 


தலைமை செயலக கொடி கம்பம்

சென்னை கோட்டை கொத்தளத்தில் புதிதாக புனரமைக்கப்பட்ட கொடிகம்பத்தை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செய்தார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், சுதந்திர தின விழாவிற்கு முதலமைச்சர் கோட்டை கொத்தளத்தில் கொடியேற்ற உள்ளதாகவும், சுதந்திர தின விழாவிற்கு முதலமைச்சர் தான் கொடியேற்ற வேண்டும் என உரிமையை பெற்று தந்தவர் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி எனவும் கூறினார். மேலும், தலைமைச் செயலகத்தில் உள்ள கொடிக்கம்பத்தை ஆய்வு செய்தபோது துருப்பிடித்திருந்ததாக குறிப்பிட்ட அவர், கொடி கம்பத்தை புதுப்பிக்க வேண்டும் என்ற அடிப்படையில் முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், 

Tap to resize

Latest Videos

கடலில் பேனா நினைவு சின்னம்

45 லட்சம் மதிப்பீட்டில் நிதி ஒதுக்கீடு செய்து புதுப்பிக்கும் பணி நடைபெற்றது என்றும், இன்னும் ஓரிரு தினங்களில் புதுப்பிக்கும் பணி நிறைவடையும் எனவும் தெரிவித்தார். பேனா நினைவு சின்னம் அமைக்கும் பணி இரண்டு கட்டங்களாக தொடங்கப்பட்டதாக கூறிய அவர், பேனா நினைவுச் சின்னத்தால் பொதுமக்களுக்கு இடையூறு இல்லை என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது என்றும், முதற்கட்ட பணிகள் நடைபெற்று வருவதாகவும், இரண்டாம் கட்ட பணி தான் கடலில் பேனா நினைவு சின்னம் நிறுவுவது எனவும், அதற்கான மதிப்பீடு தயார் செய்யப்படவில்லை என்றும், கருணாநிதி நினைவிட கட்டுமான பணி 90 சதவீதம் நிறைவடைந்துள்ளதாகவும் அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.

இதையும் படியுங்கள்

ஓபிஎஸ் மீது வழக்கு..? இறங்கி அடிக்க தயாராகும் எடப்பாடி- என்ன காரணம் தெரியுமா.?

 

click me!