மேட்டூரில் இருந்து மகா புஷ்கர விழாவையொட்டி 10 கன அடி தண்ணீர் திறப்பு !!  காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை !!!

 
Published : Sep 13, 2017, 08:32 AM ISTUpdated : Sep 19, 2018, 01:10 AM IST
மேட்டூரில் இருந்து மகா புஷ்கர விழாவையொட்டி 10 கன அடி தண்ணீர் திறப்பு !!  காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை !!!

சுருக்கம்

mettur dam open

மகா புஷ்கர விழாவையொட்டி மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி நீர் திறந்துவிடப்படுவதால், காவிரிக் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குருபகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடம்பெயரும் போது அந்த ராசிக்கு உரிய நதியில் புஷ்கர விழா கொண்டாடப்படும். இந்த ஆண்டு கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்கு குரு பகவான் இடம் பெயர்வதால், துலாம் ராசிக்கு உரிய காவிரி ஆற்றில் புஷ்கர விழா கொண்டாடப்படுகிறது.

நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் நேற்று தொடங்கிய விழா வருகிற 23ஆம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை கொண்டாடப்படும் காவிரி மகா புஷ்கர விழாவை ஒட்டி, மேட்டூர் அணையில் இருந்து, நேற்று இரவு 10 மணி அளவில் வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டது.

இதன் காரணமாக காவிரிக் கரையோரம் வசிக்கும் மக்கள் ஆற்றுப் பகுதிக்குச் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

காவிரிக் கரையோரம் உள்ள கிராமங்களில் வருவாய்த்துறை சார்பில் தண்டோரா அடித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

தற்போது மேட்டூர் அணைக்கு 20 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையின் நீர்மட்டம் 76.69 அடியை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 

 

PREV
click me!

Recommended Stories

திருவள்ளூர் சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்.. நாட்டையே உலுக்கிய சம்பவம்.. கயவனுக்கு இரட்டை ஆயுள் தண்டனை!
கண்ணாடி முன் நின்று கல்லெறியும் திமுக.. ஸ்டாலினுக்கு சுளுக்கெடுத்த தளபதி விஜய்!