மூன்று வருடங்களுக்கு முன்பு காணாமல் போன இளைஞர், பெண்ணாக வீட்டிற்குத் திரும்பினார்…

Asianet News Tamil  
Published : Dec 02, 2016, 11:04 AM ISTUpdated : Sep 19, 2018, 02:23 AM IST
மூன்று வருடங்களுக்கு முன்பு காணாமல் போன இளைஞர், பெண்ணாக வீட்டிற்குத் திரும்பினார்…

சுருக்கம்

கறம்பக்குடி அருகே மூன்று வருடங்களுக்கு முன்பு சித்தி வீட்டில் இருந்து காணாமல் போன இளைஞர், பெண்ணாக மாறி வீட்டிற்குத் திரும்பினார். அவரை பார்த்த உறவினர்கள் ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகேயுள்ள இடையன்காடு கிராமத்தை சேர்ந்தவர் இலட்சுமணன் (22). இவருடைய பெற்றோர்கள் இறந்துவிட்ட நிலையில் கறம்பக்குடியில் உள்ள சித்தி செல்வி வீட்டில் வசித்து வந்தார்.

இந்த நிலையில் அவர் கடந்த 2013–ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 12–ஆம் தேதி வீட்டை விட்டு காணாமல் போனார். இது குறித்து அவரது சித்தி கொடுத்த புகாரின் பேரில் கறம்பக்குடி காவலாளர்கள் வழக்குப்பதிவு செய்து இலட்சுமணனை தேடி வந்தனர்.

விசாரணையில் இலட்சுமணன் பெண்ணாக மாறி வட மாநிலங்களில் வசித்து வருவதாக காவலாளருக்கு தகவல் கிடைத்தது. இது தொடர்பாக “திருநங்கைகள் உரிமை மற்றும் மறுவாழ்வு” மையத்திற்கு காவலாளர்கள் தகவல் தெரிவித்தனர்.

இந்த நிலையில் காணாமல் போன இலட்சுமணன் பெண்ணாக புதன்கிழமை கறம்பக்குடிக்கு திரும்பி வந்தார். அவரைப் பார்த்த அவரது உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இது குறித்து தகவல் அறிந்த கறம்பக்குடி காவலாளர்கள் இலட்சுமணனை பிடித்து நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். விசாரணைக்கு

பின் வீடு திரும்பிய இலட்சுமணன், “நான் 12–ஆம் வகுப்பு வரை படித்து உள்ளேன். சிறு வயது முதலே என்னை நான் பெண்ணாகவே வளர்த்து கொண்டேன். என்னை நான் பெண்ணாக உணர்ந்ததால் கறம்பக்குடி வந்த ஒரு திருநங்கை மூலம் நான் மும்பை சென்று பெண்ணாக மாறினேன். சக திருநங்கைகள் எனக்கு கல்வி என பெயர் சூட்டினர்.

இப்போது நான் மிகவும் சந்தோசமாக உள்னேன். சொந்த ஊர் திரும்பி உறவினர்களை பார்த்து மகிழ்ச்சி அடைந்தேன்” என்றார்.

ஊர் திரும்பிய கல்வியைப் பார்த்து கறம்பக்குடி பகுதி மக்கள் ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர்..

PREV
click me!

Recommended Stories

குமரிக்கடல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. எந்தெந்த மாவட்டங்களில் மழை போட்டுதாக்கப்போகுது?
விஜய் வைத்த பொறியில் சிக்கிய காங்கிரஸ்... ராகுல் அந்தர் பல்டி? அதிர்ச்சியில் ஸ்டாலின்..!