
சென்னைக்கு அருகே உள்ள பிரதான ஏரியான மதுராந்தகம் ஏரி தற்போது முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதனால் ஏரியில் இருந்து நீர் வெளியேற்றம் அதிகரித்துள்ளது. ஏரி நிரம்பியதால் 100 கன அடி நீர் வீதம் தற்ஓது வெளியேற்றப்பட்டு வருகிறது .
மதுராந்தகம் ஏரி முழு கொள்ளளவை எட்டி விட்டது. காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் ஏரியின் முழு கொள்ளளவான 23.3 அடியை நீர் எட்டிவிட்டது. ஏரியில் நீர் இருப்பு 686 மில்லியன் கன அடி ; நீர்வரத்து வினாடிக்கு 300 கன அடியாக உள்ளது.
சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் ஒன்றான
பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவு - 35 அடி இதில் இப்போது நீர் இருப்பு - 23.90 அடி யாக உள்ளது.
சென்னைக்கு அருகில் உள்ள செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவு 24 அடி. இதன் நீர்மட்டம் - 13.16 அடியாக உள்ளது. ஏரி இன்னும் நிரம்பவில்லை. இருப்பினும் இதன் நீர் வரத்தை அதிகாரிகள் கவனமாகக் கண்காணித்து வருகின்றனர்.
புழல் ஏரியின் மொத்த கொள்ளளவு - 21.20 அடி. தற்போது ஏரியின் நீர்மட்டம் - 9.20 அடியாக உள்ளது.
அதுபோல் இன்னொரு முக்கிய ஏரியான சோழவரம் ஏரியின் மொத்த கொள்ளளவு - 18.86. இதன் நீர்மட்டம் - 11 அடியாக உள்ளது. இந்த வகையில், மதுராந்தகம் ஏரியைத் தவிர மற்ற ஏரிகள் எல்லாம் இன்னும் முக்கால் வாசிகூட நிரம்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.