கோவை அருகே விவசாய கிணற்றில் லாரி தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளன.
கோவை அருகே விவசாய கிணற்றில் லாரி தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளன.
கோவை மாவட்டம் சின்னதடாகம் அருகே அடுத்த வீரபாண்டி என்ற இடத்தில் ராஜப்பன் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் 200 அடி ஆழம் கொண்ட கிணறு தடுப்புச் சுவர்கள் இல்லாமல் இருந்து வந்தது.
இந்நி்லையில் நேற்று இரவு 11.30 மணியளவில், செங்கல் சூளைக்கு சென்று விட்டு லாரி திரும்பிக்கொண்டிருந்தது. செங்கல் சூளையில் பணியாற்றி வரும் மணி, பாலமுருகன், செல்வன் ஆகியோர் லாரியில் வந்துக்கொண்ருந்தனர். அப்போது கிணறு இருப்பது தெரியாமால் லாரி தலைக்குப்புற பயங்கர சத்தத்துடன் கிணற்றுக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதனையடுத்து உடனே அக்கம்பக்கத்தினர் விரைந்து போலீசாருக்கும் மற்றும் தீயணைப்புத்துறையினருக்கும் உடனே தகவல் தெரிவித்தனர். கிரேன் மூலம் லாரி மீட்கும் பணியில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. லாரியில் இருந்து படுகாயத்துடன் ஒருவர் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மீதமுள்ள 2 பேர் கிணற்றில் சிக்கியுள்ளனர். அவர்கள் உயிரிழந்திருக்க வாய்ப்பு உள்ளதாக மீட்பு படையினர் தெரிவித்துள்ளனர்.