Published : Apr 19, 2024, 12:05 AM ISTUpdated : Apr 19, 2024, 08:57 PM IST

Lok Sabha Election 2024 Live: நாடு முழுவதும் முதற்கட்ட வாக்குப்பதிவு நிறைவு!

சுருக்கம்

நாடு முழுவதும் 543 தொகுதிகளுக்கான 18-வது மக்களவை பொதுத் தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படுகிறது. இதில் முதல் கட்டமாக தமிழகம், புதுச்சேரியில் 40 தொகுதிகள் மற்றும் 19 மாநிலங்களில் 62 தொகுதிகள் என 102 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு, விளவங்கோடு  சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ளது.

Lok Sabha Election 2024 Live: நாடு முழுவதும் முதற்கட்ட வாக்குப்பதிவு நிறைவு!

08:57 PM (IST) Apr 19

தமிழகத்தில் 7 மணி நிலவரப்படி 72.09 சதவீதம் வாக்குப்பதிவு: சத்யபிரதா சாகு தகவல்!

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் 7 மணி நிலவரப்படி 72.09 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது

 

07:34 PM (IST) Apr 19

தமிழகத்தில் 7 மணி நிலவரப்படி 72.09 சதவீதம் வாக்குப்பதிவு

அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில் 75.67 வாக்கு சதவிகிதமும், குறைந்தபட்சமாக மத்திய சென்னையில் 67.35% வாக்குகளும் பதிவு. கள்ளக்குறிச்சிக்கு அடுத்தபடியாக தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில் 75.44%, சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் 74.87 சதவிகிதமும் வாக்குப்பதிவாகியுள்ளது.

07:31 PM (IST) Apr 19

Loksabha election 2024 பரந்தூர், வேங்கைவயல் மக்கள் தேர்தல் புறக்கணிப்பு!

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலை பரந்தூர், வேங்கைவயல் மக்கள் புறக்கணித்துள்ளனர்

 

07:12 PM (IST) Apr 19

மணிப்பூரில் வாக்குச்சாவடியை சூறையாடிய வன்முறைக் கும்பல்: இவிஎம் இயந்திரங்களுக்கு தீ வைப்பு!

மணிப்பூரில் வாக்குச்சாவடியை வன்முறை கும்பல் ஒன்று சூறையாடி, வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு தீ வைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

 

06:27 PM (IST) Apr 19

நிறைவடைந்தது முதற்கட்ட வாக்குப்பதிவு: தமிழகத்தில் 5 மணி நிலவரப்படி 63.20 சதவீதம் வாக்குப்பதிவு!

நாடு முழுவதும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நிறைவு பெற்றுள்ளது

 

05:20 PM (IST) Apr 19

இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்கும்: 101 வயதில் வாக்களித்த முதல்வர் ஸ்டாலினின் தாய் மாமா!

இந்தியா கூட்டணி கண்டிப்பாக வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் என 101 வயதில் வாக்களித்த முதல்வர் ஸ்டாலினின் தாய் மாமா தெரிவித்துள்ளார்

 

04:56 PM (IST) Apr 19

அயோத்தி ராமர் கோயில்: அன்சாரி குடும்பத்துக்கு மோடி புகழாரம்!

அயோத்தி ராமர் கோயிலுக்கு எதிராக சட்டப்போராட்டம் நடத்திய அன்சாரி குடும்பம் கோயில் திறப்பு விழாவில் கலந்து கொண்டதை பிரதமர் மோடி பாராட்டியுள்ளார்

 

04:30 PM (IST) Apr 19

கர்நாடகாவில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை: இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தல்!

கர்நாடகாவில் அடுத்த மூன்று நாட்களுக்கு சில மாவட்டங்களில் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது

 

03:50 PM (IST) Apr 19

மக்களவைத் தேர்தல் முடிவுகள் அதிமுகவினர் திருந்த வாய்ப்பாக அமையும்: வி.கே.சசிகலா!

மக்களவைத் தேர்தல் முடிவுகள் அதிமுகவினர் திருந்த வாய்ப்பாக அமையும் என வி.கே.சசிகலா தெரிவித்துள்ளார்

 

12:55 PM (IST) Apr 19

இபிஎஸ் எங்கு இருக்காரே தெரியல.. இந்த தேர்தல் முடிவில் அதிமுக எங்கள் வசம் வரும்.. ஓ.பன்னீர் செல்வம் சரவெடி!

2026ல் ஜெயலலிதாவின் ஆட்சியை அமைப்போம் என தேனி பெரியகுளத்தில் வாக்களித்த பாஜக கூட்டணி சுயேச்சை வேட்பாளர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். 

12:42 PM (IST) Apr 19

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான தளபதி விஜய் வாக்களித்தார்

12:09 PM (IST) Apr 19

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வாக்களித்தார்

சென்னை வேளச்சேரியில் உள்ள வாக்குச்சாவடியில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி வாக்களித்தார்.

12:05 PM (IST) Apr 19

முதல் ஆளாக வந்து வாக்களித்தார் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார்

12:00 PM (IST) Apr 19

தமிழ்நாட்டில் 11 மணி நிலவரப்படி வாக்குப்பதிவு 24.37%

தமிழ்நாட்டில் 11 மணி நிலவரப்படி வாக்குப்பதிவு 24.37%  பதிவாகியுள்ளது. அதிகபட்ச கள்ளக்குறிச்சியில் 26.58 சதவீதமும், குறைந்தபட்ச மத்திய சென்னையில் 20.09 சதவீதமும் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

11:56 AM (IST) Apr 19

மனைவியுடன் வந்து நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார் சீமான்

11:43 AM (IST) Apr 19

மத்திய சென்னை பாஜக வேட்பாளர் வினோஜ் பி செல்வம் வாக்களித்தார்

11:35 AM (IST) Apr 19

இயக்குனர் ஹரி தன் மனைவி ப்ரீத்தா உடன் வந்து வாக்களித்தார்

11:25 AM (IST) Apr 19

கவிஞர் வைரமுத்து, ஜெயகோபால் கரோடியா அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் வாக்களித்தார்

11:01 AM (IST) Apr 19

மக்களவை தேர்தலில் வாக்களித்தார் இயக்குனர் தங்கர்பச்சான்

10:56 AM (IST) Apr 19

பேமிலியோடு வந்து வாக்களித்தார் தயாநிதி மாறன்

10:54 AM (IST) Apr 19

இந்த தேர்தல் முடிவில் அதிமுக எங்கள் வசம் வரும்... ஓ.பன்னீர் செல்வம்

இந்த தேர்தல் முடிவில் அதிமுக எங்கள் வசம் வரும், எடப்பாடி பழனிசாமி எங்கிருக்கிறார் என்றே தெரியவில்லை. 2026ல் ஜெயலலிதாவின் ஆட்சியை அமைப்போம் என தேனி பெரியகுளத்தில் வாக்களித்த பாஜக கூட்டணி சுயேச்சை வேட்பாளர் ஓ.பன்னீர் செல்வம் பேட்டியளித்துள்ளார். 

10:42 AM (IST) Apr 19

பென்ஸ் காரில் வந்து வாக்களித்தார் நடிகர் தனுஷ்

10:08 AM (IST) Apr 19

நமக்கான உரிமைகளை கேட்டுப் பெற வல்லவர்களை, நல்லவர்களை தேர்ந்தெடுக்கும் முக்கியமான நாள்- எடப்பாடி பழனிசாமி

 இன்றைய தேர்தலில் புதிய தலைமுறை வாக்காளர்கள் இளைஞர்கள், பெண்கள், தவறாமல் வாக்குச்சாவடிக்கு சென்று ஜனநாயக கடதை ஆற்ற வேண்டும் என எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டார்

 

10:08 AM (IST) Apr 19

Lok Sabha Election : வாக்களிக்க சென்னையில் இருந்து வெளியூர் சென்றவர்கள் இத்தனை லட்சம் பேரா.? வெளியான லிஸ்ட்

நாடாளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இதற்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்ட நிலையில், கடந்த 2 நாட்களில் மட்டும் அரசு பேருந்துகளில் மட்டும் 4 லட்சம் பேர் பயணித்துள்ளனர். 
 

10:08 AM (IST) Apr 19

Lok Sabha Election : வாக்களிக்க சென்னையில் இருந்து வெளியூர் சென்றவர்கள் இத்தனை லட்சம் பேரா.? வெளியான லிஸ்ட்

நாடாளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இதற்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்ட நிலையில், கடந்த 2 நாட்களில் மட்டும் அரசு பேருந்துகளில் மட்டும் 4 லட்சம் பேர் பயணித்துள்ளனர். 
 

10:07 AM (IST) Apr 19

Lok Sabha Election : 9 மணி நிலவரப்படி 12.55 சதவீத வாக்குப்பதிவு.! எந்த தொகுதியில் அதிக வாக்குப்பதிவு தெரியுமா?

நாடாளுமன்ற தேர்தல் இன்று தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் நிலையில், இன்று காலை 9 மணி நிலவரப்படி 12.55% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

 

10:02 AM (IST) Apr 19

இதை மட்டும் நிரூபிச்சிட்டீங்கன்னா அரசியலை விட்டே விலகுகிறேன்.. அண்ணாமலை அதிரடி சரவெடி!

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஊத்துப்பட்டி வாக்குச்சாவடி மையத்தில் பாஜக மாநில தலைவரும், கோவை தொகுதி பாஜக வேட்பாளருமான அண்ணாமலை தனது வாக்கினை பதிவு செய்தார். இதனையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அண்ணாமலை: இந்த தேர்தல் ஒளிவு மறைவின்றி, நேர்மையாக நடத்தி இருக்கிறோம். திமுகவினர் பணத்தை வைத்து கோவையை வென்று விடலாம் என நினைக்கிறார்கள். 

 

10:01 AM (IST) Apr 19

வாக்குச் சாவடியில் ஏசியாநெட் தமிழ் நேரலை!!

10:00 AM (IST) Apr 19

சென்னை மாநகராட்சி மேயர் பிரியா வாக்களித்தார்

09:58 AM (IST) Apr 19

முதல் முறை வாக்காளர்களுக்கு தென் சென்னை வேட்பாளர் தமிழிசை அழைப்பு!!

09:53 AM (IST) Apr 19

மக்களவை தேர்தலில் வாக்களித்தார் நடிகர் ஹரிஷ் கல்யாண்

09:48 AM (IST) Apr 19

சென்னையில் இருந்து சிறப்பு ரயில் இயக்கம்!!

09:47 AM (IST) Apr 19

கணவருடன் வந்து வாக்களித்தார் நடிகை நமீதா

09:36 AM (IST) Apr 19

மனைவியுடன் வந்து வாக்களித்தார் நடிகர் பிரபு

09:33 AM (IST) Apr 19

ஜோதிமணி பெரிய திருமங்கலம் பள்ளியில் வாக்களித்தார்

கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி பெரிய திருமங்கலம் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். 

09:28 AM (IST) Apr 19

சத்குரு வாக்களித்தார்!!

09:28 AM (IST) Apr 19

பாஜக பணம் கொடுத்ததாக தெரிவித்தால், அந்த நிமிடமே அரசியலை விட்டு விலகுகிறேன் - அண்ணாமலை

09:24 AM (IST) Apr 19

முதல்வர் மு.க. ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவு!!

09:15 AM (IST) Apr 19

ஒரே நேரத்தில் வாக்களிக்க வந்த விஜய பிரபாகரன் மற்றும் தமிழிசை செளந்தரராஜன்

09:11 AM (IST) Apr 19

நடிகை குஷ்பு கணவர் சுந்தர் சி-யுடன் வந்து வாக்களித்தார்!!