இதை மட்டும் நிரூபிச்சிட்டீங்கன்னா அரசியலை விட்டே விலகுகிறேன்.. அண்ணாமலை அதிரடி சரவெடி!

இந்த தேர்தல் ஒளிவு மறைவின்றி, நேர்மையாக நடத்தி இருக்கிறோம். திமுகவினர் பணத்தை வைத்து கோவையை வென்று விடலாம் என நினைக்கிறார்கள்.

First Published Apr 19, 2024, 9:55 AM IST | Last Updated Apr 19, 2024, 9:55 AM IST

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஊத்துப்பட்டி வாக்குச்சாவடி மையத்தில் பாஜக மாநில தலைவரும், கோவை தொகுதி பாஜக வேட்பாளருமான அண்ணாமலை தனது வாக்கினை பதிவு செய்தார். இதனையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அண்ணாமலை: இந்த தேர்தல் ஒளிவு மறைவின்றி, நேர்மையாக நடத்தி இருக்கிறோம். திமுகவினர் பணத்தை வைத்து கோவையை வென்று விடலாம் என நினைக்கிறார்கள். கோவையில் ஒரு வாக்காளருக்காவது பாஜக சார்பில் வாக்குக்கு பணம் கொடுக்கப்பட்டது என நிரூபிக்கப்பட்டால் நான் அரசியலில் இருந்து விலகத் தயார். பண அரசியலுக்கு மக்கள் முடிவு கட்டும் தேர்தலாக இந்த தேர்தல் இருக்கும் என கூறினார். 

Video Top Stories