கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் கைதான மனோஜ் சாமிக்கு மேலும் 15 நாள்கள் காவல் நீட்டிப்பு…

First Published Aug 17, 2017, 7:37 AM IST
Highlights
Kodanadu murder case extortion case for 15 days of extension to Manoj Sami


நீலகிரி

கோடநாடு காவலாளி கொலை, கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள மனோஜ் சாமியின் காவல் முடிந்த நிலையில் அவருக்கு மேலும் 15 நாள்கள் காவலை நீட்டித்து கோத்தகிரி மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.

மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் கடந்த ஏப்ரல் 24–ஆம் தேதி அதிகாலை 11 பேர் கொண்ட மர்ம கும்பல் எஸ்டேட் காவலாளி ஓம்பகதூரை தாக்கிவிட்டு எஸ்டேட் பங்களாவிற்குள் நுழைந்து விலையுயர்ந்த பொருட்கள் மற்றும் முக்கிய ஆவணங்களை கொள்ளையடித்துவிட்டு தப்பிச் சென்றனர்.

இச்சம்பவம் குறித்து மாவட்ட எஸ்.பி முரளி ரம்பா தலைமையில் ஆறு தனிப்படை காவலாளர்கள் தீவிர விசாரணை மேற்க்கொண்டதில் பத்து பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுநர் கனகராஜ் சேலம் அருகே உள்ள ஆத்தூரில் ஏற்ப்பட்ட சாலை விபத்தில் மரணமடைந்தார்.

கோடநாடு கொலை மற்றும் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட கேரள மாநிலத்தைச் சேர்ந்த திபு. சதீசன். குட்டி பிஜின். உதயகுமார் மற்றும் வாளையார் மனோஜ் சாமியார் ஆகியோர் ஏற்கனவே கைதாகி கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த ஜீலை மாதம் 18–ஆம் தேதி அவர்கள் ஐந்து பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

மேலும், இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட ஜம்ஷீர் அலி மற்றும் ஜித்தின் ராய் ஆகியோர் கோடநாடு சம்பவத்திற்காக தங்களது பெயரில் கேரள மாநிலத்தில் இருந்து கார் வாடகைக்கு எடுத்து வந்து கார் மோசடி செய்த வழக்கில் கேரள காவலாளர்களால் கைது செய்யப்பட்டு கேரள மாநிலம் மஞ்சேரி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இதுதவிர வயநாடு மனோஜ் சாமி. சயான். சந்தோஷ் சாமி ஆகியோர் மத்திய சிறையில் இருந்த நிலையில் சந்தோஷ் சாமி மற்றும் வயநாடு மனோஜ் சாமி ஆகியோர் கடந்த 28–ஆம் தேதி நீலகிரி மாவட்டம உதகை நீதிமன்றத்தில் தங்களுக்கு ஜாமீன் வழங்கக் கோரி வழக்கறிஞர்கள் மூலம் மனு அளித்தனர்.

அந்த மனுவை விசாரித்த மாவட்ட நீதிபதி வடமலை சந்தோஷ், “சாமிக்கு நிபந்தனையும் கூடிய ஜாமீன்” வழங்கி உத்தரவிட்டார். வயநாடு மனோஜ் சாமியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தார்.

இதனைத் தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் 7–ஆம் தேதி கோத்தகிரி நீதிமன்றத்தில் இரு நபர் ஜாமீன் மற்றும் 25 ஆயிரம் மதிப்புள்ள சொத்து மதிப்பு சான்ற வழங்கியதால் மாஜிஸ்திரேட் ஸ்ரீதர் சந்தோஷ் சாமிக்கு ஜாமீன் வழங்கியதுடன் தினமும் கோத்தகிரி காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என உத்தரவிட்டார். ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டது.

கோவை மத்திய சிறையில் உள்ள வயநாடு மனோஜ் சாமியின் காவல் நேற்றுடன் முடிவடைந்த நிலையில் கோத்தகிரி மாஜிஸ்திரேட் முன்னிலையில் அவரை காவலாளர்கள் சமர்ப்பித்தனர்.

மாஜிஸ்திரேட் ஸ்ரீதர் வயநாடு மனோஜ் சாமியின் காவலை வரும் ஆகஸ்ட் 30–ஆம் தேதி வரை 15 நாள்களுக்கு நீட்டித்து உத்தரவிட்டடார். அதனைத் தொடர்ந்து அவர் மீண்டும் கோவை சிறையில் அடைக்கப்பட்டார்.

click me!