
டி20 கிரிக்கெட்டில் வேகமாக 8000 ரன்கள் எடுத்த இந்திய வீரர் என்ற விராட் கோலியின் சாதனையை கேஎல் ராகுல் முறியடித்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை டெல்லி கேபிடல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் 2025 போட்டியின்போது ராகுல் இந்த அற்புதமான மைல்கல்லை எட்டினார்.
இதற்கு முன்பு இந்த சாதனை கோலி 243 இன்னிங்ஸ்களில் 8000 ரன்கள் எடுத்திருந்தார். இருப்பினும், ராகுல் வெறும் 224 இன்னிங்ஸ்களில் இந்த சாதனையை எட்டினார். மேலும் 230 இன்னிங்ஸ்களுக்குள் 8000 டி20 ரன்கள் எடுத்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையையும் பெற்றார். ஒட்டுமொத்தமாக, கிறிஸ் கெய்ல் 213 இன்னிங்ஸ்களில் 8000 ரன்களைக் கடந்து முதலிடத்தில் உள்ளார். பாபர் அசாம் 218 இன்னிங்ஸில் இந்த மைல்கல்லை அடைந்து இரண்டாவது இடத்தில் உள்ளார். ராகுல் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார்.
டி20 போட்டிகளில் வேகமாக 8000 ரன் எடுத்தவர்கள் (இன்னிங்ஸ் அடிப்படையில்)
213 - கிறிஸ் கெய்ல்
218 - பாபர் அசாம்
224 - கே.எல். ராகுல்*
243 - விராட் கோலி
244 - முகமது ரிஸ்வான்
ஞாயிற்றுக்கிழமை டெல்லி அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டிக்கு முன்னதாக, இந்திய தேசிய கீதம் ஒலிக்கப்பட்டது. அப்போது இரு அணிகளின் வீரர்களும் எழுந்து நின்று இந்திய ராணுவத்திற்கு மரியாதை செலுத்தினர்.
இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான எல்லை தாண்டிய பதட்டங்கள் காரணமாக ஐபிஎல் 2025 பத்து நாட்கள் இடைநிறுத்தப்பட்ட பிறகு, டெல்லியில் நடைபெறும் முதல் போட்டி இதுவாகும்.
இதேபோல, பிற்பகல் ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் நடந்த போட்டியிலும் தேசிய கீதம் ஒலிக்கப்பட்டு, ராணுவத்துக்கு மரியாதை செலுத்தப்பட்டது. இந்தப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி ராஜஸ்தான் ராயல்ஸை பத்து ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.