காசிமேடு மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டம் - 1000 க்கும் மேற்பட்ட படகுகள் கரையில் நிறுத்தம்...! 

 
Published : Oct 24, 2017, 08:15 AM ISTUpdated : Sep 19, 2018, 01:20 AM IST
காசிமேடு மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டம் - 1000 க்கும் மேற்பட்ட படகுகள் கரையில் நிறுத்தம்...! 

சுருக்கம்

Kazimedu fishermen have been involved in the strike as they do not go to fishing until the case of the police registered with 10 fishermen.

10 மீனவர்கள் மீது போலீசார் பதிவு செய்துள்ள வழக்கை திரும்ப பெறும் வரை மீன்பிடிக்க செல்ல மாட்டோம் என காசிமேடு மீனவர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

திருவொற்றியூர் அருகே காசிமேடு கிராமத்தில் ஏராளமான மீனவ கிராம மக்கள் மீன்பிடித் தொழில் செய்து வருகின்றனர். இந்நிலையில், அப்பகுதியில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரின் உறவினர்கள் அதிவேக மோட்டாரான சீன இன்சினை பயன்படித்தி மீன்கள் பிடிப்பதாகவும் இதனால் தங்களது வாழிவாதாரம் பாதிக்கப்படுவதாகவும் அப்பகுதி மீனவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். 

இதைகண்டித்து அப்பகுதியில் வசிக்கும் மீனவர்கள் மூவாயிரத்திற்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

மேலும் கடலுக்குள் மீன் பிடிக்க செல்லாமலும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், சென்னை காசிமேடு மீனவர்கள் 6வது நாளாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

வேலை நிறுத்தத்தால் 1000க்கும் மேற்பட்ட படகுகள் கரையில் நிறுத்தப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் நடந்த மோதல் தொடர்பாக 10 மீனவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளதாகவும் வழக்கை திரும்பப் பெறும் வரை போராட்டத்தை கைவிடப் போவது இல்லை என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். 

PREV
click me!

Recommended Stories

எமன் ரூபத்தில் வந்த கார்.! கண்ணிமைக்கும் நேரத்தில் தூக்கி வீசப்பட்ட பாதயாத்திரை சென்ற பக்தர்கள்.! 3 பெண்கள் ஸ்பாட் அவுட்!
இபிஎஸ் பிடிவாதத்தால் தத்தளிக்கும் பாஜக.. தமிழகத்தில் மட்டும் ஏன் இந்த நிலைமை..? அமித் ஷாவிடம் மோடி ஆவேசம்..!