நாளை முதல் மதுரை கிளை!.. நீதிபதி விக்டோரியா கவுரி செயல்படுவார் - வெளியானது அறிவிப்பு!

Published : Feb 07, 2023, 10:10 PM IST
நாளை முதல் மதுரை கிளை!.. நீதிபதி விக்டோரியா கவுரி செயல்படுவார் - வெளியானது அறிவிப்பு!

சுருக்கம்

பாஜகவின் அகில இந்திய மகளிர் அணி செயலாளராக இருந்தவர் விக்டோரியா கவுரி.

பல்வேறு சர்ச்சைகளுக்குரிய கருத்துகளைத் தெரிவித்தவர் என்ற குற்றச்சாட்டு விக்டோரியா கவுரி மீது முன்வைக்கப்பட்டுள்ளது.

அண்மையில் விக்டோரியா கவுரியை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான கொலிஜியம் பரிந்துரைத்தது. இதனை ஏற்று மத்திய அரசும் ஆணை பிறப்பித்தது. சிறுபான்மையினருக்கு எதிரான கருத்துகளை கொண்டவர்.

அவரை நீதிபதியாக நியமிக்கக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றத்தின் 21 மூத்த வழக்கறிஞர்கள் போர்க்கொடி தூக்கினர். இது தொடர்பாக கொலிஜியத்துக்கு மனு கொடுக்கப்பட்டது. ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கும் மனு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனாலும் எதிர்ப்பை மீறி விக்டோரியா கவுரியை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமித்தது மத்திய அரசு.

விக்டோரியா கவுரி நியமனத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. இந்த வழக்கு ந்த வழக்கு நீதிபதி சஞ்சீவ் கண்ணா, பி.ஆர். கவாய் ஆகியோர் பெஞ்ச் முன்பாக இன்று விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணையின் போது, வெறுப்பு பேச்சுகளுக்காக விக்டோரியா கவுரியை நீதிபதியாக நியமிக்க கூடாது என வாதிடப்பட்டது. ஆனால் உச்சநீதிமன்றமோ, விக்டோரியா கவுரி நீதிபதியாக நியமிக்கப்பட்டதற்கு தடை விதிக்க மறுத்து மனுவை டிஸ்மிஸ் செய்தது.

இதையும் படிங்க..அதிமுகவில் இருந்து அதிரடி நீக்கம்.. இபிஎஸ் - ஓபிஎஸ்ஸுக்கு பறந்தது நோட்டீஸ் - அதிமுகவை துரத்தும் சர்ச்சை!

உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்ட போது சென்னை உயர்நீதிமன்றத்தில் விக்டோரியா கவுரி நீதிபதியாக பதவியேற்றார். அவருக்கு உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா பதவி பிரமாணம் செய்து வைத்தார். சென்னை உயர் நீதிமன்ற மொத்த நீதிபதிகள் பணியிடம் 75 ஆகும்.

தற்போது கூடுதல் நீதிபதிகள் பதவி ஏற்பு மூலமாக நீதிபதிகள் எண்ணிக்கை 57 ஆக உயர்ந்துள்ளது. சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார் மற்றும் விக்டோரியா கவுரி ஆகியோர் கொண்ட டிவிஷன் பெஞ்ச் ஒன்று நாளை முதல் செயல்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க..AIADMK: தென்னரசுவிற்கு கிடைத்த பெரும்பான்மை!.. வலையில் சிக்கிய ஓபிஎஸ் - டாப் கியரில் எடப்பாடி பழனிசாமி !!

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Firecracker Scam Alert: Online பட்டாசு மோசடி! சமத்தா இருந்து தப்பிச்சுக்கோங்க! அலர்ட் செய்த தமிழக அரசு!
Magalir Urimai Thogai: அக்டோபரில் ரூ.2,500 வரப்போகுதா? முதல்வர் விஜய் கொடுக்கப்போகும் அடுத்த ஜாக்பாட்!