ஜெயலலிதா மரணம் பற்றி வாட்ஸ் அப்பில் அவதூறு தகவல் - பாதிக்கப்பட்ட அப்போலோ மருத்துவர் கமிஷனரிடம் புகார்

First Published Jan 11, 2017, 1:47 PM IST
Highlights


ஜெயலலிதா மரணம் குறித்து தாம் பல உண்மைகளை வெளியிட உள்ளதாகவும் தனது பெயர் முகவரியுடன் வாட்ஸ் அப்களில் உலாவ்ரும் செய்தியால் தாம் அதிகம் பாதிக்கப்பட்டதாக கூறி அப்போலோ மருத்துவர் கமிஷனரிடம் புகார் அளித்துள்ளார். வாட்ஸ் அப்பில் இந்த தகவலை பரப்பியவர்கள் யார் என விசாரிக்க கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.

முதல்வர் ஜெயலலிதா கடந்த செப்.22 அன்று உடல் நலக்குறைவால் அப்போலோ மருத்துவமனியில் அனும்திக்கப்பட்டார். ஆரம்பத்தில் சற்று உடல நலம் பாதிக்கப்பட்ட அவர் மருத்துவர்களின் சிறப்பான சிகிச்சையால் உடல் நலம் தேறி வந்தார். இந்நிலையில் டிஸ்சார்ஜ் ஆகவிருந்த முதல்வர் ஜெயலலிதா திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் டிச.5 அன்று சிகிச்சை பலனில்லாமல் உயிரிழந்தார்.

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருக்கிறது. அவர் செப் 22 ஆம் தேதியே மரணம் அடைந்து விட்டார். இதை சொல்லக்கூடாது என்று எங்களை நிர்வாகமும் , சசிகலா ஆட்களும் மிரட்டினார்கள் என்று அப்போலோவில் கன்சல்டிங் டாக்டராக் இருக்கும் டாக்டர்  வி. ராமசுப்ரமணியன் எனபவர் அனுப்பியது போல் ஒரு வாட்ஸ் அப் மெசேஜை சில விஷமிகள் தயார் செய்து அதை பரவ விட்டனர்.

அந்த மெசேஜில் டாக்டர் ராமசுப்ரமணியன் கூறுவது போல் அவரது பெயர் முகவரி , செல்போன் நம்பர், தி.நகரில் உள்ள கிளீனிக் அட்ரஸ் , அவரது கிளினிக் லாண்ட் லைன் நம்பர் , அவரது இ.மெயில் ஐடி உட்பட அத்தனை விபரங்களும் அடங்கி இருந்தன.

22 ஆம் தேதியே மரணமடைந்த விபரத்தை ஊடகங்கள் என்னிடம் பேட்டி எடுத்து வெளியிட மறுக்கின்றன என்ற மெசேஜை பார்த்து செய்தியாளர்கள் அவரது செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டனர். அவரது நண்பர்களும் நலம் விரும்பிகளும் டாக்டரிடம் என்ன இப்படி ஒரு மெசேஜ் அனுப்பி உள்ளீர்கள் என்று கேட்டவுடன் டாக்டர் ராமசுப்ரமணியம் அந்த மெசேஜை பார்த்து அதிர்ந்து போயுள்ளார்.

தனக்கு ஆகாதவர்கள் யாரோ இது போன்ற வேலையை செய்துள்ளனர் என்று டாக்டர் நண்பர்கள்  மற்றும் போன் செய்து கேட்பவர்களிடம் கூறியுள்ளார். பின்னர் தனது போனையே சுவிட்ச் ஆஃப் செய்து விட்டார். 

இந்நிலையில் நேற்று கமிஷனர் அலுவலக்த்துக்கு வந்த டாக்டர் ராமசுப்ரமணியன் கமிஷனர் ஜார்ஜை நேரில் சந்தித்து புகார் ஒன்றை அளித்தார். அதில் தனக்கு ஆகாதவர்கள் யாரோ விஷமத்தனமாக மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக நான் மெசேஜ் அனுப்பியத்காக வாட்ஸ் அப் வலைதளங்களில் பரவ விட்டுள்ளனர். 

இது திட்டமிட்ட அவதூறு இதன் பின்னனியில் உள்ள விஷயங்கள் மற்றும் மெசேஜை தயார் செய்து அனுப்பியவர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கும் படி கேட்டு கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார். 
புகாரை பெற்ற கமிஷனர் அதை சைபர் கிரைமுக்கு விசாரிக்க உத்தரவிட்டுள்ளார்.

click me!