சல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து இரட்டைச் சகோதரிகள் தொடர் ஓட்டம்…

First Published Jan 12, 2017, 12:16 PM IST
Highlights

சேலம்:

சேலம் அருகே தம்மம்பட்டியில் சல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து இரட்டைச் சகோதரிகள் தொடர் ஓட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.

சல்லிக்கட்டுக்கு அனைத்து மக்களும் ஆதரவு தெரிவித்து அதை பல்வேறு கோணங்களில் பொதுமேடைக்கு கொண்டு வருகின்றனர். உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து எப்படி கர்நாடகா செயல்பட்டபோது ஒருவரும் அதனை எதிர்த்து குரல் கொடுக்காத போது தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டன சல்லிக்கட்டுக்கு தடை விதித்தை எதிர்த்து இந்தாண்டு சல்லிக்கட்டு நடத்தியே ஆக வேண்டும் என்று தமிழர்கள் முனைப்போடு இருக்கின்றனர். உச்சநீதிமன்றத்திற்கும், மத்திய அரசிற்கும் ஒரு வாய்ப்பு கொடுத்து தடையை நீக்க கோரினர். ஆனால், தடையை நீக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் கைவிரித்தைத் தொடர்ந்து இனி தடையை உடைத்து சல்லிக்கட்டு நடத்துவோம் என்று சூழ்நிலைக்கு தமிழர்களை தள்ளியது உச்சநீதிமன்றமும், மத்திய அரசும் தான்.

இந்த நிலையில் சேலம் மாவட்டம் தம்மம்பட்டியில் சல்லிக்கட்டு நடத்தக் கோரி இரட்டை சகோதரிகள் தொடர் ஓட்டம் நடத்தினர். உலிபுரத்தில் இருந்து தம்மம்பட்டி வரை 5 கிலோ மீட்டர் இந்த தொடர் ஓட்டம் நடைபெற்றது. இவர்களுடன் பொதுமக்களும் தொடர் ஓட்டத்தில் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

அனைவரும் ஒன்றாக நின்று இந்த முறை சல்லிக்கட்டு நடத்த போகிறார்கள் என்ற நம்பிக்கை விதையை அனைவரின் மனதிலும் விதைத்து ஆயிற்று,

இந்த பொங்கலை தொலைக்காட்சிப் பெட்டி முன் உட்கார்ந்து யாரும் திரைப்படங்கள் பார்த்து கழிக்கப்போவது இல்லை. களத்தில் காளைகளை கட்டி அணைத்து சல்லிக்கட்டோடு கொண்டாடபோகின்றனர்.

tags
click me!