ஜல்லிக்கட்டு அறிக்கைகள் திரும்ப பெறப்படும்..... உச்சநீதிமன்றதில் மத்திய அரசு தகவல்......!

 
Published : Jan 24, 2017, 02:39 PM ISTUpdated : Sep 19, 2018, 03:01 AM IST
ஜல்லிக்கட்டு  அறிக்கைகள்  திரும்ப  பெறப்படும்..... உச்சநீதிமன்றதில் மத்திய அரசு  தகவல்......!

சுருக்கம்

ஜல்லிக்கட்டு  தொடர்பாக கடந்த  ஜனவரி மாதம் வெளியிடப்பட்ட  அறிவிக்கை  திரும்ப  பெறப்படும் என  உச்சநீதிமன்றத்தில்  மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ஜல்லிக்கட்டை  நடத்த  வேண்டுமென  வலியுறுத்தி உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் இளைஞர்கள் பிரமாண்ட  போராட்டத்தில்  ஈடுபட்டனர் .

சென்னை மெரீனா கடற்கரையில்  எட்டு  நாட்கள் நடைபெற்ற மாபெரும் போராட்டம்  உலக மக்களின் ஒட்டு மொத்த  கவனத்தை  திரும்பி பார்க்க முடிந்தது.

 போராட்டம் தீவிரம் அடைந்ததை தொடர்ந்து,  தமிழக சட்டமன்றத்தில்,  அவசர சட்டம் நிறைவேற்றப்பட்டு அதனை தொடர்ந்து,  நிரந்தர சட்ட முன்வடிவு தாக்கல்  செய்யப்பட்டது.

இந்நிலையில்,  ஜல்லிக்கட்டு தொடர்பாக வழக்கு உச்சநீதிமன்றத்தில்  இன்று விசாரணைக்கு  வந்தது. அப்போது, ஜல்லிக்கட்டு  தொடர்பாக கடந்த  ஜனவரி மாதம் வெளியிடப்பட்ட  அறிவிக்கைகள் அனைத்தும்    திரும்ப  பெறப்படும் என  உச்சநீதிமன்றத்தில்  மத்திய அரசு தலைமை  வழக்கறிஞர்  தெரிவித்தார் .

மேலும் ஜல்லிக்கட்டு தொடர்பாக   நாளை உச்சநீதிமன்றத்தில் இடைக்கால மனுக்கள் தாக்கல் செய்யப்படும் என   மத்திய  அரசு  சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இதனையடுத்து, காட்சிபடுத்துதல் பட்டியலில் இருந்து , காளையினம் நீக்கப்படும் என்ற  நல்ல  செய்தி  வெளியாகும் என  தமிழர்கள்  ஆவலோடு  எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்

PREV
click me!

Recommended Stories

முதல்வரோடு முருகன் கைகோத்துள்ளார்..! ஸ்டாலினிடம் இருந்து முருகனை யாராலும் பிரிக்க முடியாது..! சேகர்பாபுவின் முரட்டு முட்டு..!
தனி அறையில் 45 வயது பெண்.. விடாமல் இரவு முழுவதும் 5 பேர்.! மறுநாள் மரணம்.. நடந்தது என்ன?