அதிமுக எம்பிகள் ராஜினாமா செய்ய வேண்டும்... அலங்காநல்லூரில் வெடிக்கும் பூகம்பம்

Asianet News Tamil  
Published : Jan 18, 2017, 05:17 PM ISTUpdated : Sep 19, 2018, 02:59 AM IST
அதிமுக எம்பிகள் ராஜினாமா செய்ய வேண்டும்...  அலங்காநல்லூரில் வெடிக்கும் பூகம்பம்

சுருக்கம்

ஜல்லிக்கட்டு விளையாட்டை 2014ம் ஆண்டு உச்சநீதிமன்றம் தடை செய்தது. அன்று முதல் இன்று வரை தமிழர்களும் எப்படியாவது நமது பாரம்பரிய விளையாட்டை நடத்தியே தீர வேண்டும் என மத்திய, மாநில அரசுக்கு எதிராகவும், நீதிமன்ற ஆணைக்கு எதிராகவும் பல கட்ட போராட்டங்களை உலகம் முழுவதும்  தமிழர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். 

ஜல்லிக்கட்டு போராட்டம் அலங்காநல்லூரில் மிகவும் குறைந்த எண்ணிக்கையில் இளைஞர்கள் போராட்ட தொடங்கினர். போலீசார் ஊர் பொதுமக்களை மிரட்டினர்.போராடும் இளைஞர்களிடம் ஊர்பொதுமக்கள் நீங்கள் இங்கிருந்து கலைந்து செல்லுங்கள் நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் என்றனர்.

அதற்கு மாணவர்கள் நாங்கள் தமிழர் என்ற அடையாளத்திற்கு உங்கள் சார்பில் போராடுகிறாம் என தெரிவித்தனர். அதனையடுத்து அந்த ஊர் மக்கள் பொதுமக்கள் நமக்காக வெளியில் இருந்து இளைஞர்கள் போராடும் போது நாம் உள்ளூர் மக்கள் அவர்களுக்கு ஆதரவு கொடுக்க வேண்டுமென மாணவர்களை ஆதரவு தெரிவித்தனர். 

அதனையடுத்து அடுத்த அருகில் உள்ள கிராமங்கள் பிற மாவட்டங்களில் இருந்து ஏராளமான மாணவர்கள் அலங்காநல்லூர் குவிய தொடங்கினர். ஆனால் தமிழக அரசு செவி சாய்க்கமால்  அதிமுக தொடர்பாக திவகாரன் பேசியதற்கு தமிழக அமைச்சர்கள் காமராஜர், சம்பத், மணியன் ஆகியோர் முன்னாள் அமைச்சர் அவர்  யாரோருக்கு விலை போகிவிட்டார் என பேசினார்கள்.

ஆனால் ஜல்லிக்கட்டு போராட்டம் குறித்து எவ்வித நடவடிக்கை குறித்தும் அவர்கள்  பேச முன்வரவில்லை,ஜல்லிக்கட்டு தொடர்பாக எவ்வித அறிக்கை வெளியிடமால் வழக்கம் போல் தங்கள் பணியை தொடங்கினார். இது தமிழக மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது,

ஆரம்பத்தில் ஜல்லிக்கட்டுக்கு மாவட்டம் தோறும் போராட்டம் தொடங்கி தாலுகா தோறும் பரவி அதனையடுத்து தமிழகம் முழுவதும் அனைத்து இடங்களிலும் போராட்டம் தீவிரமடைந்தது.

சென்னையில் வரலாறு படைந்த போராட்டம் உலகத்தையை திரும்ப பார்க்க வைத்துள்ளது.அலங்காநல்லூரில் மத்திய மாநில அரசுக்கு காலக்கெடு வழங்கியுள்ளனர். அதன்படி இன்று மாலைக்குள் ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு அவசர சட்டம் இயற்ற வேண்டும், தமிழகத்தில் உள்ள எம்.பிகள் அனைவரும் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டுமென  போராட்டகாரர்கள் கூறிவருகின்றனர். 

PREV
click me!

Recommended Stories

தென் மாவட்ட மக்களுக்கு அடுத்த 3 மணி நேரத்திற்கு அலர்ட்.! அடிச்சு ஊத்தப்போகும் மழை.! முக்கிய அப்டேட்
மீனவர் வாழ்வில் ஒளி வீசும்! - கன்னியாகுமரியில் விஜய் கொடுத்த அதிரடி வாக்குறுதிகள் | TVK Vijay Speech