இயற்கை உபாதை கழிக்க அவதிப்படும் ஆர்ப்பாட்டக்காரர்கள் - நடமாடும் கழிப்பறையை தடுத்து நிறுத்திய நல்லெண்ண போலீசார்

Asianet News Tamil  
Published : Jan 18, 2017, 04:38 PM ISTUpdated : Sep 19, 2018, 02:59 AM IST
இயற்கை உபாதை கழிக்க அவதிப்படும் ஆர்ப்பாட்டக்காரர்கள் - நடமாடும் கழிப்பறையை தடுத்து நிறுத்திய நல்லெண்ண போலீசார்

சுருக்கம்

ஜல்லிக்கட்டுக்கு எதிராக பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் திரண்டு 30 மணி நேரத்துக்கும் மேலாக போராடி வருகின்றனர்.

அவர்களுக்கு தற்காலிக கழிப்பறை கூட கிடைக்க விடாமல் போலீசார் தடுத்து வருகின்றனர்.

சென்னை மெரீனா கடற்கரையில் நேற்று காலை 200 இளைஞர்கள் திரண்டு போராடிய போராட்டம் அரசாங்கம் அலட்சியம் காரணமாக இன்று 30,000க்கும் மேற்பட்ட இளைஞர்கள் போராடும் போராட்டமாக மாறியுள்ளது.

30 மணி நேரத்துக்கும் மேலாக போராட்டக்காரர்கள் களத்தில் நின்று போராடி கொண்டிருகின்றனர்.

அவர்களுக்கு இயற்கை உபாதைகளை கழிக்க நடமாடும் கழிப்பறை மெரீனா கடற்கரைக்கு கொண்டுவரபட்டது.

ஆனால் போலீசார் அந்த வாகனத்தை போராட்ட களத்திற்கு செல்ல விடாமல் எம்ஜிஆர் சம்தி அருகே பிடித்து வைத்துள்ளனர்.

போராடும் இளைஞர்களின் இயற்கை உபாதைகளை கூட கழிக்க விடாமல் மனிதாபிமானமற்ற  முறையில் போலீசார் இவ்வாறு நடந்து கொள்வதை போரட்டக்காரர்கள் கண்டித்தனர்.

PREV
click me!

Recommended Stories

தமிழ்நாட்டிற்கு தொடர்ந்து துரோகம் செய்யக்கூடிய கூட்டணி அதிமுக கூட்டணி ! கனிமொழி அனல் பறக்கும் பேச்சு
வாக்குச்சாவடிகளில் கலவரம் செய்யப்போறாங்க... திமுகவின் பகீர் பிளானை லீக் பண்ணிய