
தமிழர்களின் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளதால் கடந்த 2 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு நடைபெறவில்லை.
3வது ஆண்டாக இந்த ஆண்டும் ஜல்லிக்கட்டு நடைபெறாததால் தமிழகம் முழுவதும் இளைஞர்கள், மாணவர்கள் ஆவேசம் அடைந்து
போராட்டத்தில் குதித்துள்ளனர்.
இந்த நிலையில், ஜல்லிக்கட்டு நடத்துவது தொடர்பாக முதலமைச்சர் ஓபிஎஸ் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். மோடியிடமிருந்து சாதகமான பதில் கிடைக்காததால் தமிழகத்தில் போராட்டம் மேலும் வீரியமடைந்தது.
ஆனால் ஓபிஎஸ் நேற்று சென்னை திரும்பாமல் டெல்லியில் இருந்த படியே ஜல்லிகிகட்டு நடத்துவது குறித்து சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
இதைத்தொடர்ந்து இன்று காலை டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ், ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம் பிறப்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநர் ஒப்புதல் பெறப்பட்டு, அவசர சட்டம் பிறப்பிக்கப்படும் என்றும் இது தொடர்பான சட்ட வரைவு உள்துறை அமைச்சகத்திற்கு
வரைவு அனுப்பட்டுள்ளது என்றும் ஓபிஎஸ் தெரிவித்தார்.
இதற்கான பணிகளை தமிழக அரசின் உயர் அதிகாரிகள் மேற்கொள்வர் என்றும் மத்திய அரசின் மிருகவதை தடுப்புச்சட்டத்தில் மாநில அளவில் திருத்தம் கொண்டு வர முடிவு எடுக்கப்பட்டுள்ளத என்னும் தெரிவித்த ஓபிஎஸ்,. இன்னும் ஓரிரு நாளில் ஜல்லிக்கட்டு நடைபெறும் என்பதால், பொதுமக்கள், இளைஞர்கள், மாணவர்கள் உள்ளிடோர் போராட்டத்தை கைவிட வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.
ஆனால், ஓபிஎஸ் கோரிக்கையை ஏற்று போராட்டத்தை கைவிட போராட்ட குழுவினர் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
அதே நேரத்தில் ஜல்லிக்கட்டு பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணும் வரை போராட்டம் தொடரும் என்றும் ஜல்லிக்கட்டுக்கு தடை முழுவதுமாக நீங்கும் வரை யமாட்டோம் என்றும் உறுதிபடத் தெரிவித்தனர்,.