விஜய் டிவிக்கு ‘டாடா‘ காட்டினாரா ஜாக்குலின்? சினிமாவில் நடிக்க போவதாக தகவல்!

Asianet News Tamil  
Published : Nov 29, 2017, 04:15 PM ISTUpdated : Sep 19, 2018, 01:31 AM IST
விஜய் டிவிக்கு ‘டாடா‘ காட்டினாரா ஜாக்குலின்? சினிமாவில் நடிக்க போவதாக தகவல்!

சுருக்கம்

Jacqueline will be acting in cinema?

விஜய் டிவியில் சீரியலில் அறிமுகமான ஜாக்குலின், அதன் பின்னர் கலக்கப்போவது யாரு நிகர்ச்சியின் மூலம் தொகுப்பாளினியாக பணியாற்றி வருகிறார். 

இந்த நிலையில், கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் இருந்தும் சேனலில் இருந்தும் ஜாக்குலின் விலகப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு காரணம்... அண்மையில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் ஜான விஜய் பங்கேற்றார். அப்போது அவருடன் ஜாக்குலின் நடனமாடினார். 

நடனத்தின்போது, ஜான விஜய், ஜாக்குலினை தொட்டு நடனமாடி உள்ளார். இதையடுத்து ஜாக்குளின் மேடையிலேயே என்னைத் தொடாமல் ஆடும்படி கேட்டுக் கொண்டார்.

இதன் பின்னர், ஜாக்குலின், ஜெகன் நடத்தும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது ஜாக்குலினை, ஜெகன் இரட்டை அர்த்தத்தில் கலாய்த்ததார். 

நிகழ்ச்சியில் தன்னை பலரும் கலாய்ப்பதால் விலகல் முடிவை ஜாக்குலின் எடுத்ததாக கூறப்படுகிறது.

விஜய் டிவியில் தொகுப்பாளினியாக இருக்கும் ஜாக்குலின் சேனலை விட்டு விலகியதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் சீரியல் மூலம் அறிமுகமானார் ஜாக்குலின்.

அதன் பின்னர் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் தொகுப்பாளியானார். தற்போது நிகழ்ச்சியை விட்டும் சேனலை விட்டும் ஜாக்குலின் வெளியேறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால், சிலரோ ஜாக்குலின், சினிமாவில் நடிக்கத் துவங்கி விட்டதாகவும், அதனால் சேனலில் இருந்து விலகியதாகவும் கூறப்படுகிறது. நடிகை நயன்தாரா நடிக்கும் படத்தில் ஜாக்குளின் தங்கையாக நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. 

PREV
click me!

Recommended Stories

தீபம் ஏற்றும் நாள் விரைவில் வரும்.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் சர்ச்சை பேச்சு!
எனக்கே சேலஞ்சா.. திமுகவை வேரோட அழிச்சுருவோம்.. ஸ்டாலினுக்கு பழனிசாமி வார்னிங்!