
வருமானவரி முறையாக செலுத்தப்படவில்லை என்ற புகாரின் அடிப்படையில் புகழ் பெற்ற செய்யது பீடி அலுவலகம் மற்றும் ஆலைகளில் 2 ஆவது நாளாக வருமான வரித் சோதனை நடைபெற்று வருகிறது.
நெல்லையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் செய்யது பீடி நிறுவனத்துக்கு மதுரை, சென்னை போன்ற இடங்களில் அலுவலகங்கள் உள்ளன.
இந்த செய்யது பீடி நிறுவனம் முறையாக வரிசெலுத்தவில்லை என்று கூறி நேற்று காலை 7 மணி முதல் நெல்லை, மதுரை, சென்னை ஆகிய இடங்களில் உள்ள வீடு மற்றும் அலுவலகங்களில் 40 இடங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
நெல்லையில் 9 இடங்களிலும், சென்னையில் பெல்ஸ் சாலையில் உள்ள அலுவலகம் உள்ளிட்ட 40 இடங்களில் சோதனை நடைபெற்றது.
இந்நிலையில் சேப்பாக்கத்தில் உள்ள அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களில் 2வது நாளாக இன்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
இதுவரை நடத்தப்பட்ட சோதனையில் கணக்கில் வராத 3 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தொடர்ந்து சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
தொடர்ந்து பல ஆவணங்கள் முக்கிய கைப்பற்றப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.