கோடிகோடியாய் வாரிக் குவித்த செய்யாதுரைக்கு கையெழுத்துக்கூடப் போடத் தெரியாதா! அதிகாரிகளே ஆடிப் போன ஆபரேஷன் பார்க்கிங்!

First Published Jul 17, 2018, 11:18 AM IST
Highlights
IT officials shocks contractor Seyyadurai improvement


அருப்புக்கோட்டை கீழ்முடிமன்னார் கோட்டையை சேர்ந்தவர் செய்யாதுரை. இவர் தமிழகத்தில் நெடுஞ்சாலை ஒப்பந்த பணியாளராக உள்ளார். இவரது நிறுவனம்தான் எஸ்.பி.கே. அந்த நிறுவனத்தில்தான் இன்று வருமான வரித் துறையினர் ஆபரேஷன் பார்க்கிங் என்ற பெயரில் மெகா ரெய்டை நடத்தி வருகின்றனர்.

நேற்று நடந்த இந்த மெகா ரெய்டுக்கு உள்ளாகியிருக்கும் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த காண்ட்ராக்டர் செய்யாதுரைக்கு இன்னமும் கையெழுத்துக்கூடப் போடத் தெரியாதாம். கோடிகோடியாய் குவித்து வைத்திருக்கும் அவருக்கு கையெழுத்து போடத் தெரியாது என்பதை அறிந்து வருமான வரித்துறை அதிகாரிகளே ஆடிப் போய்விட்டார்களாம். அதிகாரிகளின் வியப்பு இன்னும் தீரவில்லை.

கையெழுத்து கூடப் போடத்தெரியாத இந்த  செய்யாதுரை கடுமையான உழைப்பாளி. ஆரம்ப காலத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆட்டுத் தோல் வியாபரம் செய்தவர். ஆட்டுத் தோல் வியாபாரத்துடன் அதிமுகவிலும் பினர் ஆனார்.

கமுதி ஒன்றிய செயலாளர் பொறுப்பும் இவருக்கு கிடைத்தது.  சிறு கிராம சாலைகள்,பழுதடைந்த சாலைகள் என ஒப்பந்தம் எடுக்க ஆரம்பித்தார்.  அதிமுக ஒன்றிய செயலாளர் என்பதால் ஒப்பந்தம் கிடைப்பதில் சிக்கல் இல்லை.

தன்னுடைய நண்பர் ராமகிருஷ்ணன் என்பவரோடு சேர்ந்து எஸ்.ஆர். அன்கோ என்ற பெயரில் சிறு சிறு வேலைகளை கான்ட்ராக்ட் எடுத்துச் செய்துவந்திருக்கிறார்கள்.

கோடி கோடியாய் பணத்தை குவித்து வைத்திருக்கும் இந்த ஆட்டுத் தோல் வியாபாரி செய்யாதுரை  தலையில் துண்டை போட்டுக் கொண்டு கான்ட்ராக்ட் வேலை நடக்கும் இடங்களில் இரவு பகல் பார்க்காமல் தங்கி கவனம் எடுத்துச் செய்வாராம். இருவரும் அசுரவேகத்தில் முன்னேரி வந்தனர்.

இவர்களின் இந்த வளர்ச்சியானது  ஏழு வருடங்களுக்கு முன்பு வரைதான். எடப்பாடி பழனிசாமி நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக பொறுப்பேற்ற சமயத்தில், செய்யாதுரையின் மகன் நாகராஜ் சிவில் இன்ஜினியரிங் படித்து முடித்திருக்கிறார். தொழிலை டெவலப் செய்யும் பொருட்டு நாகராஜ் நெடுஞ்சாலைத் துறையில் சிலர் மூலமாக எடப்பாடியை அணுகியிருக்கிறார். அப்போது சசிகலா குடும்பத் தொடர்பும் நாகராஜுக்கு கிடைத்த பிறகுதான் பெரிய பெரிய கான்ட்ராக்ட் தொழிலுக்குள் முழுமையாக வந்தார் செய்யாதுரை.

அவர் மகன் நாகராஜ் செய்வது பார்ட்னரான ராமகிருஷ்ணனுக்கு ஒத்து வராததால்.  அவர் செய்யாதுரையிடம் இருந்து பிரிந்து சுகன்யா என்ற பெயரில் தனியாக தொழில் நடத்த ஆரம்பித்தார். அதன் பின் செய்யாதுரை எஸ்.பி.கே. என்ற கம்பெனி மூலமாக நெடுஞ்சாலைத்துறைக்குள் தனிக்காட்டு ராஜாவாக வலம் வந்திருக்கிறார்.

அப்போதைய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எடப்பாடி  மூலமாக கிடைத்த சசிகலாவின் தொடர்பு இன்னொரு பக்கம் ஓ.பன்னீர் செல்வத்தின் தொடர்பு என்று செய்யாதுரையின் எஸ்.பி.கே. நிறுவனம் கான்ட்ராக்ட்டுகளை வாரிக் குவித்தார். இதனையடுத்து எடப்பாடி முதல்வர் ஆன பிறகு அவரோடு மட்டுமே நெருக்கத்தை அதிகமாக்கினார் செய்யாதுரை. சென்னை அண்ணாசாலை கான்ட்ராக்ட் முதல் மதுரை பைபாஸ், நெல்லை 500 கோடிக்கு டிவிஷன் சாலைகள் டெண்டர், ராமநாதபுரம், பொள்ளாச்சி என தமிழகத்தின் பல பகுதிகளில் சாலை டெண்டர்கள் எல்லாம் செய்யாதுரையின் எஸ்.பி.கே. நிறுவனத்துக்கே கிடைத்தது.

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் உள்ள சாலைகளை 5 வருடங்களுக்கு பராமரிக்க 2 ஆயிரம் கோடி ரூபாய் டெண்டர் மூலமாக இந்த நிறுவனத்துக்கு லேட்டஸ்டாக ஒதுக்கப்பட்டுள்ளது. இதையெல்லாம் டார்கெட்டாக வைத்துதான் வருமான வரித்துறை செய்யாதுரை வீட்டுக்குள் நுழைந்திருக்கிறது.

click me!